ஜியோ பயனர்களே தினசரி 2ஜிபி டேட்டா வேண்டுமா? இதோ அருமையான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஜியோ நிறுவனம். மேலும் இந்த ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

2ஜிபி டேட்டா நன்மை
அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இப்போது இந்நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.299 திட்டம்
ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.533 திட்டம்
ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 112ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில்உள்ளன. பின்பு jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.719 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவேஇந்த திட்டத்தில் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

ஜியோ ரூ.799 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் வருடாந்திர சந்தாவுடன் வருகிறது. எனவே திட்டத்தை நம்பி தேர்வு செய்யலாம். பின்பு இந்த ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்
போன்ற பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது ஜியோ ரூ.799 திட்டம்.

ஜியோ ரூ.1066 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட சந்தா மற்றும் ஜியோ டிவி போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை கொண்டுள்ளதுஇந்த அசத்தலான திட்டம். அதேபோல் பயனர்களுக்கு இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.2879 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2879 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 730ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டநன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறதுஇந்த ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications