வா தலைவா வா.. உனக்காக இந்தியாவே வெயிட்டிங்: ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் உடன் வரும் Jio Phone 5G.!
ஜியோ நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த 4ஜி ஜியோபோனுக்கு கூட நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய ஜியோபோன் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஜியோபோன் 5ஜி
ஜியோ நிறுவனம் புதிய 5ஜி போனை உருவாக்க கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே இந்த புதிய Jio Phone 5G மாடலில் நாம் பல புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். மேலும் தற்போது Geekbench தளத்தில் இந்த ஜியோபோன் 5ஜி மாடலின் அம்சங்கள் கசிந்துள்ளது. அதை முதலில் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
Geekbench தளத்தில் வெளியான தகவலின்படி, இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு Adreno 619 GPU ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன்.

சிறந்த செயல்திறன்
குறிப்பாக கேமிங் வசதிக்கு இந்த ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இது சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 4ஜிபி ரேம் வசதியுடன் இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இருந்து போதிலும் வேறு ரேம் விருப்பங்களில் கூட இந்த போன் வெளிவரலாம்.

64ஜிபி ஸ்டோரேஜ்
இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

எல்சிடி டிஸ்பிளே வசதி
ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு..
ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. பின்பு வைஃபை 802.11 a/b/g/n, புளூடூத் 5.1 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஜியோபோன் மாடல்.

டூயல் ரியர் கேமரா
ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஜியோபோன் 5ஜி மாடல்.

எப்போது அறிமுகம்?
இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த புதிய ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனின் மாடல் நம்பர் LS1654QB5 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,000-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications