வீட்டுக்கு 3 போன் வாங்கலாம்.. அம்பானிக்கே வெளிச்சம்.. ரூ.7,999 பட்ஜெட்.. ஜியோ போன் 5ஜி வெளியீட்டு தேதி?
இந்தியாவே திரும்பி பார்க்கும் மலிவான விலையில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ஜியோ போன் 5ஜி (JioPhone 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த விவரம் இதோ.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் (Annual General Meeting) வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் ஜியோவின் வருங்கால திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகவும் மலிவான விலையில் வெளியாகும் 5ஜி ஸ்மார்ட்போனாக, ஜியோ போன் 5ஜி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த போனுக்கான பிரத்யேக திட்டங்களும் வெளியாக இருப்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், ஜியோ 5ஜி போன் எப்போது அறிமுகமாகிறதோ, அதே நாளில் 5ஜி பிளான்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று ஜியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ நிறுவனத்தின் ஜியோ புக் லேப்டாப் ஆகஸ்ட் 1ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இந்த லேப்டாப்பின் விலை வெறும் ரூ.16,499ஆக நிர்ணயிக்கப்பட்டது. லேப்டாப்பே, இவ்வளவு கம்மியான விலையில் கிடைக்கிறது என்றால், இந்த போனின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். இந்த போனின் கசிந்துள்ள அம்சங்கள் குறித்த முழு விவரம் பின்வருமாறு.
ஜியோ போன் 5ஜி அம்சங்கள் (Jio Phone 5G Specifications): இந்த ஜியோ போன் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
4 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொடுக்கப்படுகிறது. அதோடு மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த போனின் போட்டோக்கள் ட்விட்டரில் ஏற்கனவே, லீக்காகியிருக்கிறது.
ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்படலாம். அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வர அதிக வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு 12 (Android 12 OS) ஓஎஸ் மற்றும் பிரகதிஓஎஸ் (PragatiOS) கொண்ட குவால்கம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் (Qualcomm Snapdragon 480 Plus) சிப்செட் வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல ப்ளூடூத் 5.1, வைபை 802, பேஸ் அன்லாக், பிரிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், டூயல் நானோ சிம் போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், போன்ற முக்கியமான அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், என்3, என்5, என்28, என்40 மற்றும் என்78 போன்ற 5 க்கும் மேற்பட்ட 5ஜி பேண்ட் சப்போர்ட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜியோ 5ஜி போனோடு, அந்த போனுக்கான 5ஜி பிளான்கள் குறித்த அறிவிப்பும் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், முன்னதாக ஜியோ பாரத் போன் (Jio Bharat Phone) வெளியான போது, ஜியோ பாரத் பிளான்களும் (Jio Bharat Plans) அறிமுகம் செய்யப்பட்டன.
வெறும் ரூ. 123 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானும், ரூ. 1,234 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானும் அறிமுகமாகின. அதே போல மாதாந்திர மற்றும் வருடாந்திர பிளான்களோடு ஜியோ போன் 5ஜி வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
இந்த போன் ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு விற்பனைக்கு வருகிறது. ரூ.7,999 விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், ரெட்மி, போக்கோ போன்ற நிறுவனங்களில் 5ஜி போன்களே இப்போது வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இந்த போனில் 5ஜி அம்சத்தை தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும் குறைந்தபட்சமே கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








