Home
Mobile

ஆரம்பிக்கலாங்களா? Jio Phone 5G இப்படி தான் இருக்கும்! லீக்கான புகைப்படம்! எப்போது அறிமுகம்?

ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களை விட அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ஜியோ நிறுவனம். அதேபோல் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த 4ஜி போன் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் ஜியோ நிறுவனம் தனது 5ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் பயனர் ஒருவர் ஜியோ போன் 5ஜி-இன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த 5ஜி போனின் சில அம்சங்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சற்று விரிவான தகவலைப் பார்ப்போம்.

Jio Phone 5G  இப்படி தான் இருக்கும்! லீக்கான  புகைப்படம்!

அதாவது ஜியோ போன் 5ஜி-இன் பின்புறம் பிளாஸ்டிக் பேனல் உள்ளது. அதேபோல் இந்த போனின் பின்புறம் மையத்தில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிகிறது. அதேபோல் இந்த போன் வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஜியோ போன் 5ஜி ஆனது 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி அல்லது 8எம்பி கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஜியோ போன் 5ஜி பின்புற பேனலில் ஜியோ லோகோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் இந்த ஜியோ போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த 5ஜி போன் அறிமுகமாகும்.

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, ஜியோ போன் 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஜியோ போன் 5ஜி மாடல் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்னேகர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஜியோ 5ஜி போன் வெளிவரும்.

4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஜியோ போன் 5ஜி அறிமுகாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்? ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது வரும் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் இந்த 5ஜி போனின் அறிமுகம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo courtesy: Arpit 'Satya Prakash' Patel

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Phone 5G photo leaked online: Key specifications and launch information here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X