கம்மி விலையில் இத்தனை அம்சங்களா? திக்குமுக்காட வைத்த Jio Phone 5G.!

|

ஜியோ நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கூட தங்களது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

குறிப்பாக இந்த தனியார் நிறுவனங்களின் 5ஜி சேவை ஆனது இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஜியோ நிறுவனம் 5ஜி சேவை அறிமுகம் செய்தவுடன் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

குழப்பமே வேணாம்.. சிறந்த தள்ளுபடி விலையில் OnePlus ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!குழப்பமே வேணாம்.. சிறந்த தள்ளுபடி விலையில் OnePlus ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

5ஜி ஸ்மார்ட்போன்

5ஜி ஸ்மார்ட்போன்

தற்போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 91மொபைல் இணையத்தில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்மி விலையில் அற்புதமான சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!கம்மி விலையில் அற்புதமான சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

கம்மி விலை

கம்மி விலை

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,000 அல்லது ரூ.10,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதாவது மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது ஜியோ நிறுவனம்.

Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?

ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர்

91 மொபைல் இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, புதிய ஜியோ போன் 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் ரூ.1000 கோடி வசூல், 12 லட்ச ஸ்மார்ட்போன்களை விற்ற Samsung.. என்ன நடக்குது இந்தியாவில்!ஒரே நாளில் ரூ.1000 கோடி வசூல், 12 லட்ச ஸ்மார்ட்போன்களை விற்ற Samsung.. என்ன நடக்குது இந்தியாவில்!

ஸ்னாப்டிராகன் பிராசஸர்

குறிப்பாக இந்திய சந்தையில் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த ஜியோபோன் 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Xiaomi 12டி, 12டி ப்ரோ போன்களின் வெளியீட்டு தேதி: ஆர்வமுடன் காத்திருக்கும் மக்கள்.!Xiaomi 12டி, 12டி ப்ரோ போன்களின் வெளியீட்டு தேதி: ஆர்வமுடன் காத்திருக்கும் மக்கள்.!

ஜியோ போன் ட்ரூ 5ஜி

ஜியோ போன் ட்ரூ 5ஜி

மேலும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Jio Phone True 5G(ஜியோ போன் ட்ரூ 5ஜி) எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

Tecno Pop 6 Pro மீது சலுகை இல்ல தள்ளுபடி இல்ல.! ஆனா விலை மட்டும் ரூ.6,099 தான்.! எப்படி?Tecno Pop 6 Pro மீது சலுகை இல்ல தள்ளுபடி இல்ல.! ஆனா விலை மட்டும் ரூ.6,099 தான்.! எப்படி?

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்

ஜியோபோன் 5ஜி ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். கண்டிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

WhatsApp மூலம் ஆதார், PAN டவுன்லோடு செய்வது எப்படி? இந்த டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!WhatsApp மூலம் ஆதார், PAN டவுன்லோடு செய்வது எப்படி? இந்த டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

13எம்பி மெயின் கேமரா

13எம்பி மெயின் கேமரா

குறிப்பாக ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஜியோபோன் 5ஜி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒரே அசிங்கமா போச்சு! விண்வெளியில் அதிக குப்பைகளை போடும் நாடு இதுதான்!ஒரே அசிங்கமா போச்சு! விண்வெளியில் அதிக குப்பைகளை போடும் நாடு இதுதான்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விரைவில் அறிமுகமாகும் ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 4ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை 802.11, புளூடூத் 5.1, கூகுள் மொபைல் சேவைகள் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் எனப் பல சிறப்பான வசதிகள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Phone 5G Full specifications leaked online: Price, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X