ஜியோ போன் 2 இன் மூன்றாவது பிளாஷ் சேல் இன்று துவங்குகிறது ரெடி ஆகிக்கோங்க.!
ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் 2 மாடல் மொபைல் போன் சென்ற வாரங்களில் தனது விற்பனையில் அனைத்து யூனிட்களையும் விற்று தீர்ததை தொடர்ந்து, இன்று தனது மூன்றாவது பிளாஷ் சேல்ஸ் ஐ ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் 2 மாடல் மொபைல் போன் சென்ற வாரங்களில் தனது விற்பனையில் அனைத்து யூனிட்களையும் விற்று தீர்ததை தொடர்ந்து, இன்று தனது மூன்றாவது பிளாஷ் சேல்ஸ் ஐ ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ வின் புதிய ஜியோ போன் 2 இன் பிளாஷ் சேல் ஜியோ நிறுவனத்தின் Jio.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்று மதியம் 12 மணிக்குத் துவங்குகிறது.

ஜியோ போன் 2 இன் சிறப்பம்சங்கள்
ஜியோ போன் 2 இன் சிறப்பம்சங்கள் அதனுடைய க்யூவெர்ட்டி கீபேட், டூயல் சிம் கார்டு ஆதரவு, பெரிய திரை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த ஜியோ போன் 2 இன் முந்தைய இரண்டு விற்பனை அமோகமாக இருந்ததைத் தொடர்ந்து, இன்று பிளாஷ் சேல் விற்பனை துவங்கவுள்ளது. சென்ற இரண்டு பிளாஷ் சேல் விற்பனையில் ஏராளமான ஜியோ போன்கள் விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே விற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் & டிவிட்டர்
ஜியோ போன் 2ல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்துச் செயலிகளையும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 4ஜி வசதி கொண்டது. இதில் கூகுள் மேப், யூடூயூப் மற்றும் வீடியோ காலிங் செய்யும் வசதி என்று நிறைய சேவைகளுடன்இந்த ஜியோ போன் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ விற்பனை பிளான்
ஜியோ போன் 2 இந்திய சந்தையில் ரூ.2,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஜியோ போன் விற்பனையில் உங்களுக்கு ஏற்ற மூன்று 4ஜி தரவு கொண்ட ரூ.49, ரூ. 99 மற்றும் ரூ.153 பிளான்களை ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

பிளாஷ் சேல் விற்பனை
முன்னர் நடந்தபட்ட பிளாஷ் சேல் போலவே இந்த பிளாஷ் சேல் விற்பனையிலும் குறிப்பிட்ட யூனிட் ஜியோ போன்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படும். நீங்கள் பதிவு செய்யும் ஜியோபோன் 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் கைகளுக்கு வந்து சேருமென்று ஜியோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஜியோ போன் 2 விபரக்குறிப்பு:
- 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே
- 2 மெகா பிக்சல் பின் கேமரா மற்றும் விஜிஏ முன் கேமரா
- டூயல் சிம் வசதி
- 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள் சேமிப்பு
- 128ஜிபி எக்ஸ்பெண்டபிள் சேமிப்பு
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- என்.எப்.சி
- எப் எம் வசதி
- 2000 எம்ஏஎச் பேட்டரி
விலை : ரூ.2,999


Click it and Unblock the Notifications