Home
Mobile

Jio அம்பானி நீ மகராசனா இருய்யா.. UPI ஆதரவுடன் வெறும் ரூ.800 க்கு புது 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.800 க்கும் குறைவான விலையில் ஒரு புதிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.799 விலை கொண்ட இந்த 4ஜி போன், சமூகத்தின் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்னமும் லட்சக்கணக்கான 2ஜி பயனர்கள் உள்ளனர்; அவர்களால் இரண்டு காரணங்களால் 4ஜி-க்கு மாற முடிவதில்லை. முதலாவதாக, 4ஜி போன்கள் அவர்களுக்கு அதிக விலை கொண்டதாகவும், அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இல்லாமலும் உள்ளன. இரண்டாவதாக, அவர்களுக்கு டச் ஸ்க்ரீன் (touch screen) போன்களை பயன்படுத்துவதில் புரிதல் இல்லை; அவர்கள் கீபேட் (keypad) கொண்ட போன்களையே விரும்புகிறார்கள்.

UPI ஆதரவுடன் வெறும் ரூ.800 க்கு புது 4ஜி Jio போன் அறிமுகம்!

எனவே, அத்தகைய பயனர்களுக்கு உதவும் வகையில், ஜியோ நிறுவனமானது ஜியோபாரத் (JioBharat) சீரீஸ் போன்களை வழங்கி வருகிறது. இந்த சீரீஸில் சமீபத்திய அறிமுகமாகி ஜியோபாரத் வி4 (JioBharat V4) வந்துள்ளது இந்த போன் இப்போது ஜியோமார்ட் (JioMart) மற்றும் ஜியோ.காம் (Jio.com) ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவும், ரிலையன்ஸ் ஜியோவின் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) மூலமாகவும் வாங்க கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த 'ஃபீச்சர் போன்' (feature phone) நவீன வடிவமைப்பை கொண்டுள்ளது. இது நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைப்பதுடன், இதன் விலை வெறும் ரூ.799 மட்டுமே ஆகும். ஜியோ இதனை சேஃப்டி பர்ஸ்ட் போன் (Safety First Phone) என்று அதாவது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் போன் என்று அழைக்கிறது.

ஏனென்றால் இதில் மானிட்டரிங் (Monitoring) மற்றும் யூஸர் மெனேஜ்மென்ட் (User Manager) போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன. இதன் மூலம், உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். அத்துடன், ஜியோவின் 4ஜி நெட்வொர்க் மூலம் பயனர்கள் திரைப்படங்களையும் பார்க்கலாம், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம் மற்றும் விளையாட்டு போட்டிகளின் ஹைலைட்ஸ்-ஐ (highlights) ரசிக்கலாம்.

எல்லாவற்றை முக்கியமான பாதுகாப்பான யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஜியோபே (JioPay) வசதியும் இதில் உள்ளது. யுபிஐ என்பது லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். ஆரம்பத்தில், இது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது, ​​ஜியோபாரத் சீரிஸ் போன்கள் மூலம், ஃபீச்சர் போன் பயனர்களும் யுபிஐ-ஐ பயன்படுத்தவும், தங்கள் வங்கி கணக்குகளிலிருந்து நேரடியாகப் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

இப்படியாக ஜியோ நிறுவனம் தலைப்பு செய்திகளில் அடிபட்டு நீண்ட நாட்கள் ஆகிறது.கடைசியாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.199 க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வேகத்தில், தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்கி வந்த திட்டம் ஒன்றை அமைதியான முறையில் நீக்கிய போது, வடிக்கையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்து இருந்தது.

அது ஜியோவின் ஆப்-ஒன்லி ரீசார்ஜ் ஆன ரூ.209 ப்ரீபெய்ட் பிளான் ஆகும். அதே நேரத்தில் ஜியோ நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், மைஜியோ (MyJio) ஆப்பின் 'மலிவு விலை பேக்குகள்' (Affordable Packs) பிரிவில் உள்ள 'மதிப்பு திட்டங்கள்' (Value Plans) என்ற வகையின் கீழ் முன்பு கிடைத்த ரூ.209 திட்டமானது திடீரென காணாமல் போனது. பின்னர் அது நீக்கப்பட்டதாக தெரியவந்தது. தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோவின் ஒரே ப்ரீபெய்ட் திட்டமாக இருந்த ரூ.209 பேக் ஆனது மீண்டும் கொண்டு வரப்படுமா என்பது குறித்து எந்த விவரங்களும் இல்லை.

Best Mobiles in India

English summary
Jio New 4G Phone Under Rs 800 JioBharat V4 With UPI Payments Support
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X