Home
Mobile

ரூ.501/-விலையில் விற்பனைக்கு வரும் ஜியோபோன்.!

இப்போது அறிவித்துள்ள இந்த அட்டகாசமான சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Prakash S

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று அம்பானி அவர்கள் அறிவித்தது என்னவென்றால் மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் ரூ.501/-விலையில் ஜியோ போனை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தகவல்களை அறிவித்தார், பின்பு ஜியோபோன் 2, ஜியோ ஜிகாஃபைபர் போன்ற அறிவிப்புகளுடன் இந்த ஜியோபோன் சார்ந்த தகவல்களையும் அறிவித்தார்.

ஜியோபோன்:

ஜியோபோன்:

ஜியோபோன் பொறுத்தவரை கடந்த ஆண்ட அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த ஜியோபோன் வாங்கும் பயனர்களுக்கு மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ரூ.501/- மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும்.
குறிப்பாக பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர்போனினை வழங்கி இந்த புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும்.

ஜூலை 21:

ஜூலை 21:

இப்போது அறிவித்துள்ள இந்த அட்டகாசமான சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனத்தில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது, குறிப்பாக 2.4-இன்ச் டிஸ்பிளே டூயல்-கோர் செயலி வழங்கப்பட்டுள்ளது

சேமிப்பு:

சேமிப்பு:

ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோபோன் 2 சாதனத்தின் விற்பனை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Monsoon Hungama offer Exchange old phone to get new Jio : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X