Home
Mobile

அம்பானி வச்ச புது டிவிஸ்டு.. ஆக.28ல் ஒன்றல்ல.. 2 Jio 5ஜி போன்கள் அறிமுகம்? விலைய சொன்னா ஆடி போய்டுவீங்க!

வெறும் ரூ.16,499க்கு ஜியோபுக் லேப்டாப்பை (JioBook Laptop) அறிமுகம் செய்த கையோடு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று தனது புதிய 5ஜி போனை அறிமுகம் செய்யவுள்ளது என்கிற தகவல் வெளியான சில நாட்களில்.. புதிய டிவிஸ்டு ஒன்று வந்துள்ளது!

அது என்னவென்றால், மேற்குறிப்பிட்ட நாளில் ஒரே ஒரு ஜியோ போன் அல்ல, மொத்தம் 2 ஜியோ போன்கள் அறிமுகமாகும் என்கிற தகவல் பிஐஎஸ் வலைத்தளம் வழியாக கிடைத்துள்ளது. அறியதோர்களுக்கு பிஐஎஸ் (BIS) என்றால் ப்யூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (Bureau of Indian Standards) என்று அழைக்கப்படும் ஒரு தரச்சான்றிதழ் தளமாகும்.

ஆக.28ல் ஒன்றல்ல.. 2 Jio 5ஜி போன்கள் அறிமுகம்?

நேற்று வரையிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆனது தனது வருடாந்திர ஏஜிஎம் நிகழ்வை (Annual AGM event) இந்த மாத இறுதியில் நடத்தலாம் என்றும்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று நடத்தலாம் என்றும், அந்நாளில் ஜியோபோன் 5ஜி (JioPhone 5G) என்கிற புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி ஜியோவின் வருடாந்திர ஏஜிஎம் நிகழ்வின் போது இரண்டு புதிய ஜியோ போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா, பிஐஎஸ் வலைத்தளத்தில் ஜேபிவி161டபுள்யூ1 (JBV161W1) மற்றும் ஜேபிவி162டபுள்யூ1 (JBV162W1) என்கிற மாடல் நம்பர்களின் கீழ் இரண்டு ஜியோபோன்கள் "வேலையில்" உள்ளன என்பதை கண்டறிந்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இவ்விரு ஜியோ போன்களின் மாடல் பெயர்கள் (Model Names) மற்றும் அம்சங்கள் குறித்த வேறு எந்த தகவலும் பிஐஎஸ் வலைதளத்தில் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் முன்னதாக வெளியான சில அறிக்கைகளின் வழியாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிமுகமாகும் புதிய ஜியோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

விலையை நிர்ணயத்தை பொறுத்தவரை, வழக்கம் போல இம்முறையும் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தனது "பழைய" வியாபார தந்திரத்தை கட்டவிழ்த்து விடுவார். ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது பெரும்பாலும் இந்தியாவிலேயே மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக (Cheapest 5G Smartphone in India) இருக்கும். இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் இது ரூ.8000 முதல் ரூ.10,000 என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

ஜியோபோன் 5ஜி மாடலுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஜியோபோன் மாடலானது 5ஜி ஆதரவு (5G Support) உடன் வருமா? அல்லது ரூ.10,000 க்குள் அறிமுகம் செய்யப்படும் ஜியோபோன் 5ஜி மாடலை விட சற்றே மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய, சற்றே விலை அதிகமான மாடலாக வருமா? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கு? போன்ற கேள்விகளுக்ககு எந்த பதில்களும் இல்லை!

அம்சங்களை பொறுத்தவரை, ஜியோபோன் 5ஜி மாடலானது எச்டி பிளஸ் ரெசல்யூஷனுடன் (HD+ Resolution) கூடிய 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனலை கொண்டிருக்கலாம். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் (Qualcomm Snapdragon 480 SoC) மூலம் இயக்கப்படலாம். மேலும் இது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டிருக்கலாம். அதில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா இடம்பெறலாம்; இரண்டாவது சென்சார் குறித்து எந்த தகவலும் இல்லை. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

சாஃப்ட்வேர்-ஐ பற்றி பேசுகையில், பெரும்பாலும் இது கூகுள் தயாரித்த பிரகதி ஓஎஸ் (Google's Pragati OS) இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனில் 5,000எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம். இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். இதுதவிர்த்து பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor), மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் டூயல் சிம் கார்டு ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

Photo Courtesy: ARPITNAHIMLA

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio May Launch 2 New 5G Jio Phones on August 28 Check Price Specifications All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X