ஜியோ எக்ஸ்ட்ரா 4ஜி டேட்டா ஆபர் : எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு.?

|

சமீபத்தில் அறிமுகமாகியுள்ள சியோமி நிறுவனத்தின் மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனை ஜியோ பயனர்கள் வாங்கும் பட்சத்தில் ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியத்தை நிறுவனம் அளிக்கிறது. அதாவது, 100ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்.

சியோமி மி மிக்ஸ் 2 சாதனத்தை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடலாக சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான ஒரு மூலோபாய கூட்டுத்தொகையில், ஜியோ பயனர்கள் சியோமி கைபேசிகளை வாங்குவதின் மூலம் 30 ஜிபி வரையிலாக இலவச தரவை பெறலாம். ஆனால், பெரிய அளவிலான திரை கொண்ட மி மேக்ஸ் 2 வாங்குவதின் மூலம் பயனர்கள் 3 மடங்கு அதிக தரவை பெறலாம் அதாவது 100ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

மி மேக்ஸ் 2 சாதனத்தை பற்றி தெரியாதவர்களுக்கு - கடந்த செவ்வாயன்று ரூ.16,999/-க்கு அறிமுகம் ஆன மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில் இந்த சாதனம் ஒரு 6.44 இன்ச் முழுஎச்டி 1080பி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 652எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் பயன்படுத்துகிறது.

கேமரா

கேமரா

சீனாவில் இரண்டு வகை மாறுபாடுகளில் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது - 64ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு. கேமரா துறையை பற்றி பேசுகையில் இக்கருவி பிடிஏஎப் (PDAF) ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் எச்டிஆர் கொண்ட12எம்பி ரியர் கேமராவும், 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. ஒரு பாரிய 5300 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது. மி மேக்ஸ் 2 சாதனத்தின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்க்கையில் பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார், ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் ஒன்றும் உள்ளது

ஜியோ-மேக்ஸ் 2 என்ற தொகுக்கப்பட்ட சலுகை

ஜியோ-மேக்ஸ் 2 என்ற தொகுக்கப்பட்ட சலுகை

ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டண சேவைகளை வழங்கி வரும் ஜியோ நெட்வொர்க், புதிய ஜியோ-மேக்ஸ் 2 என்ற தொகுக்கப்பட்ட சலுகையின் கீழ் 4ஜி தரவு, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர், 28 நாள் செல்லுபடியாகும் ரூ.309 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட ரீசார்ஜில் கூடுதல் 10ஜிபி டேட்டாவை பெறுவர். இந்த கூடுதல் டேட்டா வாய்ப்பானது 10 ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படுகிறது, இதனால் மே 31, 2018 வரை ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ரீசார்ஜ் செய்ய கூடுதல் 10 ஜிபி தரவு கிடைக்கும்.

10ஜிபி இலவச டேட்டா

10ஜிபி இலவச டேட்டா

உதாரணத்திற்கு, ஒரு ஜியோ பயனர் மி மேக்ஸ் 2 மற்றும் 56ஜிபி டேட்டாவை வழங்கி 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.309/- ரீசார்ஜை நிகழ்த்த முதல் 28 நாட்களுக்குப்பின் கூடுதலாக 10 ஜிபி தரவு கிடைக்கும், மேலும் அடுத்த 28 நாட்களுக்கு மற்றொரு 10ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். அந்த ரீசார்ஜ் பேக்கின் செல்லுபடி காலம் முடிந்த பின்னர் மீண்டும் ரூ.309 ரீசார்ஜ் நிகழ்த்த 56 நாட்களுக்கு 56ஜிபி + 10ஜிபி + 10ஜிபி கிடைக்கும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு

இப்படியான, 100 ஜிபி வரையிலான ஜியோ தரவு சலுகையை டெலிகாம் ஆபரேட்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசஸ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படுகிறது. ஜியோவிற்கு ஜியோனி நிறுவனத்துடனும் கூட்டாண்மை உள்ளது, இதன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் வாங்குவதின் மூலம் வாடிக்கையாளர்கள் 60 ஜிபி வரையிலான இலவச தரவை பெறுவார்கள். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட லைஃப் ஸ்மார்ட்போன்களுக்கு 20 சதவீதம் கூடுதல் தரவையும் ஜியோ வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி ஒரு புதிய ஜியோஃபை பாக்கெட் ரவுட்டர் வாங்கும் பயனர்களுக்கு 224ஜிபி இலவச தரவு வரை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Is Giving Up to 100GB of Free Data With Xiaomi Mi Max 2. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X