Home
Mobile

குஷியோ குஷி.! 5 ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் Jio.. 90 நாட்கள் வேலிடிட்டி.. பட்டியல் இதோ!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா, ஓடிடி மற்றும் அதிக நன்மைகளை வழங்குகிறது ஜியோ. எனவே தான் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோல் இந்நிறுவனம் ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது. இப்போது அந்த ஐந்து திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 5 ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் Jio..

ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 459 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த ஜியோ திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா மற்றும் ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா ஜியோ ரூ.459 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

அதேபோல் ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஸ்னாப்சாட்+ சந்தா (Snapchat+ subscription), ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஃபேன்கோட் (FanCode) போன்றவற்றின் அணுகலும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ ரூ.495 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 495 prepaid plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டம் மொத்தமாக 47ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் கிளவுட் கேமிங் சலுகையில் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்களை (High Definition Premium Games) அணுக முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.495 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை, ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா, ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பேன்கோட் (FanCode) சந்தா போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 545 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் கிளவுட் கேமிங் சலுகையில் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்களை (High Definition Premium Games) அணுக முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட்திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை, ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா, ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பேன்கோட் (FanCode) சந்தா போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

 5 ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் Jio..

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Is Giving Away Extra Data on These 5 Prepaid Plans: See If Yours Is Included
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X