ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த 5 புதிய திட்டங்கள்.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். ஆனால் இந்த திட்டங்கள் செப்டம்பர் 1, 2021 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவைக்கான அணுகலை வழங்கும் என்பதால் அதிக வரவேற்பை பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ 499, ரூ.666, ரூ.888, ரூ.2,599, மற்றும் ரூ.549 திட்டங்களை தான் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாநன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ரூ.549 திட்டம் மட்டும் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். மேலும் இந்த திட்டங்களுடன்பயனர்களுக்கு வழங்கப்படும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா 1 வருடம் செல்லுபடியாகும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்பயனர்களுக்கு இந்த திட்டங்கள் ஆங்கில மொழியிலான international content உட்பட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மேடையின் கீழ் கிடைக்கும் முழு கன்டென்ட்டிற்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ அறிவித்துள்ள ரூ.499 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுடன் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.666 மற்றும் ரூ.888 ரீசார்ஜ் திட்டங்கள் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகின்றன. மேலும் ரூ.666 ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு ரூ.888 ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுடன் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த இரண்டு திட்டங்களில் கிடைக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.2599 திட்டம் ஆனது ஒரு ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக ரூ.2599 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் ஜியோவின் ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. பின்பு இந்த சிறப்பு திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications