வெறும் 1 ரூபாய்க்கு கிடைத்த ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய ஜியோ நிறுவனம்.!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. பின்பு இந்த தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சில திட்டங்களில் சலுகைகளை வழங்கி வந்தன என்றுதான் கூறவேண்டும்.

அதன்படி சமீபத்தில் பயனர்களை மகிழ்விக்கும் நோக்கில் 1 ரூபாய் விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம்.
குறிப்பாக இந்த 1 ரூபாய் திட்டமானது சுமாரான சலுகைகளை மட்டுமே வழங்கியது. அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்பயனர்களுக்கு 100 எம்பி அதிவேக டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்பட்டது.

மேலும் இந்த 1 ரூபாய் திட்டம் அறிவித்த சில நாட்களில் இதன் பலன்கள் குறைக்கப்பட்டது. அதாவது இந்த திட்டத்தில் 10எம்பிடேட்டா மட்டுமே கிடைத்தது. ஆனால் இப்போது வந்த தகவலின்படி ஜியோவின் 1 ரூபாய் திட்டம் நீக்கப்பட்டது.

இருந்தபோதிலும் குறைந்த விலையில் இந்த திட்டம் வந்ததால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனினும்தற்போது இந்த 1 ரூபாய் திட்டம் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஜியோ மொபைல் செயலியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறுநன்மைகளை வழங்குகிறது.

ரூ.601-ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ்செய்ய கிடைக்கும். அதன்படிரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒருவருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா
உள்ளிட்ட பல்வேறு நன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

கூடுதல் டேட்டா சலுகை
முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார்மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம்
டேட்டா-ஒன்லி பேக் ஆன ரூ.549 திட்டத்தையும் திருத்தியுள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி இந்த திட்டம் தற்போது ரூ.659-க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா,ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications