Home
Mobile

ஒன்னுக்கு 2 வாங்கலாம்.. ரூ.2000 பட்ஜெட்.. போனோடு 365 நாட்கள் ரீசார்ஜ்.. ஆகஸ்ட் 28க்கு காத்திருங்க!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ஆஃபர்களை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி மிகப்பெரும் சம்பவத்தை செய்யவிருக்கிறது. ரூ.999 விலையில் 4ஜி போனை அறிமுகம் செய்கிறது. அதோடு வெறும் ரூ.1,234 விலையில் 365 நாட்களில் வேலிடிட்டி பிளானும் கொடுக்கப்படுகிறது.

ஜியோ பாரத் போன் அம்சங்கள் (Jio Bharat Phone Specifications): இந்த போனை உருவாக்க கார்பன் (Karbonn) நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் கைகோர்த்துள்ளது. ஏற்கனவே, ஜியோ மார்ட் மற்றும் ஜியோ ரீடெயில் ஸ்டோர்களில் ஜியோ பாரத் போன் கிடைக்கும் வேளையில், இந்த புதிய கார்பன் மாடல் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கவிருக்கிறது.

ரூ.2,233 போதும்.. ஜியோ பாரத் போன்.. ஒரு வருடத்துக்கு ரீசார்ஜ்!

இந்த போன் 1.77 இன்ச் கியூஜிஏ (QVGA) டிஸ்பிளே கொண்டுள்ளது. கழற்றி மாட்டக்கூடிய வகையிலான 1000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 24 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த போனில் 128 ஜிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது.

எல்இடி பிளாஷ் உடன் 0.3 எம்பி விஜிஏ (VGA) கேமரா வருகிறது. இந்த ஜியோ போனில், யுபிஐ பேமெண்ட் (UPI Payment) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்திக்கொள்ள முடியும். அதோடு ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட ஜியோ ஆப்களை (Jio Apps) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், 3.5மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), டார்ச்லைட் (Torch) மற்றும் எஃப்எம் ரோடியோ (FM radio) போன்ற முக்கிய அம்சங்கள் வருகின்றன. இந்த ஜியோ பாரத் போனில் ஒரேவொரு 4ஜி சிம் கார்ட்டை மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டை மட்டுமே வேலை செய்யும்.

இந்த ஜியோ பாரத் போனில் VoLTE சப்போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், வாய்ஸ் கால்கள் மற்றும் இன்டர்நெட் தடையில்லாமல் கிடைக்கும். இந்த ஜியோ பாரத் போனின் விலை பொறுத்தவரையில், ரூ.999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த போனுக்காகவே பிரத்யேகமாக மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களும் இருக்கின்றன. இதற்கு மாதாந்திரம் மற்றும் வருடாந்திரம் என்று இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் மட்டுமே வருகின்றன. ஆனால், இந்த திட்டங்கள், இந்தியாவில் எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களும் வழங்க முடியாத மலிவு விலையில் கிடைக்கின்றன.

ஜியோ பாரத் பிளான் விவரங்கள் (Jio Bharat Plan Details): இந்த ஜியோ போனோடு விற்பனை செய்யப்படும் சிம் கார்டுகளுக்கு மட்டுமே ஜியோ பாரத் ரீசார்ஜ் பிளான்கள் (Jio Bharat Recharge Plans) பொருந்தும். அதாவது, இந்த போனுடன் வரும் மொபைல் நம்பர்களுக்கு வெறும் ரூ.123 விலையில் ஜியோ பாரத் மாதாந்திர பிளான் (Jio Bharat Monthly Plan) கிடைக்கும்.

இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படும். அதேபோல, ரூ.1,234 விலையில் ஜியோ பாரத் வருடாந்திர பிளான் (Jio Bharat Annual Plan) கிடைக்கிறது.

இந்த பிளான் மூலம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் நாள்தோறும் 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த போனும், அதற்கான ரீசார்ஜ் திட்டங்களும் மிகவும் மலிவாக கிடைக்கூடியவை. ஆகவே, வெறும் வாய்ஸ் கால்கள் மட்டுமே தேவைப்படும் நபர்களுக்கு இந்த போனைவிட்டால், வேறு நல்ல சாய்ஸே கிடையாது.

Best Mobiles in India

English summary
Jio Bharat Phone To Sale On Amazon From August 28 Specifications, Price With Jio Bharat Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X