Home
Mobile

மிஸ் பண்ணா முடிஞ்சது.. ரூ.999 விலையில் ஜியோ போன்.. வருடாந்திர ரீசார்ஜ்.. விற்பனை தொடக்கம்.. எப்படி வாங்குவது?

வெறும் ரூ.999 பட்ஜெட்டில் 4ஜி இன்டர்நெட், யுபிஐ பேமெண்ட் வசதி கொண்ட ஜியோ பாரத் போன் (Jio Bharat Phone) இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த போனை எப்படி வாங்கலாம்? அதன் அம்சங்கள் மற்றும் ரீசார்ஜ் பிளான்கள் எப்படி? அனைத்தும் இதோ.

ஜியோ (Jio) நிறுவனம் மற்ற டெலிகாம் (Telecom) நிறுவனங்களைவிட மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுடன் ஜியோ பாரத் போனை ஜூலை 4ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த போனின் விலையையும், மாதாந்திர ரீசார்ஜ் விலையையும் பார்த்தால் யாரையும் வாங்க வைத்துவிடும் போலிருக்கிறது.

ரூ.999 விலையில் ஜியோ போன்.. வருடாந்திர ரீசார்ஜ்.. எப்படி வாங்குவது?

ஜியோ பாரத் போன் அம்சங்கள் (Jio Bharat Phone Specifications): இந்த போன் 1.77 இன்ச் QVGA டிஸ்பிளே கொண்டுள்ளது. 1000mAh கழற்றி மாட்டக்கூடிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 24 மணி நேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும். 128 ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.

3.5மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. 0.3 எம்பி கேமரா இருக்கிறது. இதன் மூலம் யுபிஐ பேமெண்ட் (UPI Payment) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிகிறது. அதோடு 4ஜி இன்டர்நெட் (4G internet) சப்போர்ட் இருக்கிறது. ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn) போன்ற ஜியோ ஆப்ஸ் (Jio Apps) இன்ஸ்டால் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது.

இந்த ஜியோ பாரத் போனில் ஒரேவொரு சிம் கார்ட் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். டார்ச்லைட் (Torch), எஃப்எம் ரோடியோ (FM radio) போன்ற முக்கிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 4ஜி VoLTE சப்போர்ட் உள்ளதால், வாய்ஸ் கால் மற்றும் இன்டர்நெட் அனுபவம் மிகுந்த தரம் வாய்ந்தாக இருக்கும்.

ஜியோ பாரத் போன் விலை (Jio Bharat Price): இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜியோ பாரத் போன்களுக்காகவே பிரத்யேகமாக மலிவு விலையில் மாதாந்திர மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் இன்று விற்பனை தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் 6,500 நகரங்களில் வாங்கிக்கொள்ள முடியும்.

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் (Reliance Digital stores), ஜியோ ரீடெயில் ஸ்டோர் (Jio Retail Store) ஆகியவற்றில் நேரடியாக சென்று வாங்கிக்கொள்ளலாம். அதேபோல ஜியோ ஆப் மூலமும் வாங்கிகொள்ளும் வசதி அறிவிக்கப்படலாம். முதலில் 10 லட்சம் ஜியோ பாரத் போன்களை மட்டுமே விற்பனை செய்ய ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜியோ பாரத் பிளான்கள் (Jio Bharat Plans): இந்த போனோடு ஜியோ பாரத் ரீசார்ஜ் பிளான்கள் (Jio Bharat Recharge Plans) அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஜியோ பாரத் மாதாந்திர பிளான் (Jio Bharat Monthly Plan) மூலம் ரூ.123 செலுத்தினால் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதோடு எஸ்எம்ஸ் சலுகையும் வருகிறது.

மேலும், ஜியோ பாரத் வருடாந்திர பிளான் (Jio Bharat Annual Plan) மூலம் ரூ.1,234 செலுத்தினால், 365 நாட்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். அதோடு எஸ்எம்ஸ் சலுகையும் கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Bharat Phone Sales Start Today Here Specifications Price And How to buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X