Home
Mobile

டெலிவரி சார்ஜ் கிடையாது.. ரூ.999 போதும்.. ஜியோ 4ஜி போன்.. அமேசானில் அறக்க பறக்கும் ஆர்டர்கள்!

இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, ரூ.999 விலையில் டெலிவரி சார்ஜ் கூட வசூலிக்கப்படாமல், ஜியோ பாரத் போன் 4ஜி (JioBharat Phone 4G) அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அதோடு ஜியோ பாரத் ரீசார்ஜ் பிளான்களும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

ஜியோ பாரத் கே1 கார்பன் போன் அம்சங்கள் (JioBharat K1 Karbonn Phone Specifications): இந்த ஜியோ போன் 1.77 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 720p ரெசொலூஷன் வருகிறது. நல்ல பேக்கப் கொண்ட 1000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.999 போதும்.. ஜியோ 4ஜி போன்.. அமேசானில் அறக்க பறக்கும் ஆர்டர்கள்!

இந்த பேட்டரியை கழற்றி மாட்டிக் கொள்ளலாம். ஆகவே, பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால், போனை மாற்ற வேண்டியது கிடையாது. இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 24 மணி நேரம் பேக்கப் கிடைக்கும். 0.05 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 128 ஜிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

இதில் சிங்கிள் நானோ சிம் (Single Nano Sim) போர்ட் மட்டுமே வருகிறது. ஆகவே, ஒரேவொரு 4 சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த ஜியோ போனில் எல்இடி பிளாஷ் உடன் 0.3 எம்பி விஜிஏ (VGA) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல பீச்சர் போன்களில் கொடுக்கப்படும், டார்ச்லைட் (Torch), 3.5மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) மற்றும் எஃப்எம் ரோடியோ (FM radio) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஜியோ போனில், யுபிஐ பேமெண்ட் (UPI Payment) பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக ஜியோ பே (JioPay) ஆப் போனில் வருகிறது. அதேபோல வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், ஜியோடிவி (JioTV, ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ சாவன் (JioSaavn) உள்ளிட்ட ஜியோ ஆப்கள் (Jio Apps) வருகின்றன. இந்த ஜியோ பாரத் கே1 கார்பன் போனில் VoLTE சப்போர்ட் வருகிறது. ஆகவே, மற்ற எந்த பீச்சர் போன்களையும்விட வாய்ஸ் கால்கள் மற்றும் இன்டர்நெட் அனுபவமானது, ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக இருக்கும்.

இந்த போன் பிளாக் (Black) மற்றும் கிரே (Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் விலை பொறுத்தவரையில், ரூ.999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 28) முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை தொடங்கியது. இப்போது, விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. ஏனென்றால், இந்த போனை ஆர்டர் செய்ய ரூ.999 மட்டும் போதும், டெலிவரி சார்ஜ், பேக்கிங் சார்ஜ் என்று எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

இதனாலேயே மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த ஜியோ பாரத் போனுக்காகவே பிரத்யேகமான மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களும் (JioBharat Prepaid Plan) இருக்கின்றன. அதில் மாதாந்திரம் (Monthly) மற்றும் வருடாந்திரம் (Yearly) என்று 2 திட்டங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த 2 திட்டங்களும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவு விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, அந்த திட்டங்களின் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.

ஜியோ பாரத் பிளான் விவரங்கள் (Jio Bharat Plan Details): இந்த ஜியோ போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளுக்கு ரூ.123 விலையில் ஜியோ பாரத் மாதாந்திர பிளான் (Jio Bharat Monthly Plan) மற்றும் ரூ.1,234 விலையில் ஜியோ பாரத் வருடாந்திர பிளான் (Jio Bharat Annual Plan) வழங்கப்படுகிறது.

இதில் மாதாந்திர திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அந்த நாட்களில் நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல, வருடாந்திர திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 0.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கும். அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Bharat Phone Available on Amazon Under Rs 1000 Check Specifications, Price, Features And Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X