Jio தாராள மனசு.. மலிவு விலையில் வெளிவரப்போகும் புது 5G Mobile.. என்ன மாடல்? என்ன விலை? எப்போது ரிலீஸ்?
ஜியோ (Jio) நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் சாதனையை படைக்கவுள்ளது. மிகவும் குறைந்த விலையில் இந்தியாவில் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போனை (5G) அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் அடுத்தபடியாக விரைவில் ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அடுத்து சில மாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய 5ஜி மொபைல் சாதனத்தை (5G Mobile) மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாக முகேஷ் அம்பானி (Mukesh Ambani) நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ தாராள மனசு.. மலிவு விலையில் வெளிவரப்போகும் புது 5ஜி மொபைல் (Low Price Jio 5G Mobile):
தற்போது வெளியாகியுள்ள லீக் தகவலின் படி, ஜியோ பாரத் 5ஜி விலை (Jio Bharat 5G Price) ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 3000 முதல் ரூ. 5000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறப் போகிறது என்ற சில முக்கியமான தகவல்களும் இப்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. ஜியோவின் புதிய மலிவு விலையில் போனில் என்னவெல்லாம் இருக்க போகிறது?
ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 5.5" இன்ச் டிஸ்பிளேவுடன் (display) வெளிவரவுள்ளது. இந்த டிஸ்பிளே 4K தரத்தில் (4K validity) வீடியோவை பிரதிபலிக்கும் திறன் கொண்டது. இந்த வெளிவரவிருக்கும் புதிய ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6GB ரேம் (RAM) திறனுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) மொபைல் சாதனம் 128GB ஸ்டோரேஜ் (storage) மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பங்களுடன் ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) சாதனம் வெளிவரும் என்றும் இதன் துவக்க வேரியண்ட் மாடல் ரூ. 3000 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ பாரத் 5ஜி விலை (Jio Bharat 5G Price):
மறுபுறம், இதன் ஹை-ஸ்டோரேஜ் வேரியண்ட் (storage variant) மாடல் ரூ. 5000 விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 16MP பிக்க கேமராவுடன் (camera) வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) போனின் முன்பக்கத்தில் 6MP செல்பி கேமராவை (selfie cmera) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவொரு மலிவு விலை ஸ்மார்ட்போனாக வெளிவரும் என்பதனால், பெரியளவு கேமராவை நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரியை (Battery) பேக் செய்யுமென்று கூறப்படுகிறது. இந்த ஜியோ 5ஜி மொபைல் (Jio 5G Mobile) சாதனம் 33W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) ஆதரவை பெறுகிறது என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.
இந்த பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் ஜியோ பாரத் 5ஜி (Jio Bharat 5G) போன் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த பயன்பாட்டுடன் 2 நாள் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் (June) மாதம் அல்லது ஜூலை (July) மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








