Home
Mobile

அம்பானியின் தீபாவளி பரிசு.. ரூ.799 ஜியோபாரத் போனில் புதிய வசதி.. இனி SALE பிச்சிக்குமே!

ஐஎம்சி 2025 (IMC 2025) என்கிற இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025 (India Mobile Congress 2025) நிகழ்வில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ஜியோபாரத் போன்களுக்கான சேஃப்டி பர்ஸ்ட் கேபபிலிட்டியை (Safety First Capability) அறிவித்து உள்ளது.

இன்று (அக்டோபர் 8, 2025) யஷோபூமி மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர்களின் தொடக்க உரைகளுடன் ஆரம்பித்த ஐஎம்சி 2025 நிகழ்வில்.. ஜியோபாரத் போன் வைத்திருப்பவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள - சேஃப்டி பர்ஸ்ட் கேபபிலிட்டியின் கீழ் 4 அம்சங்கள் கிடைக்கும்:

அம்பானியின் தீபாவளி பரிசு.. ரூ.799 ஜியோபாரத் போனில் புதிய வசதி!

1. லொக்கேஷன் மானிட்டரிங் (Location Monitoring): அதாவது இருப்பிட கண்காணிப்பு. இதன் கீழ் உங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தொடர்பான இருப்பிட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்
2. யூசேஜ் மேனேஜர் (Usage Manager): இதன் கீழ் தெரியாத எண்களை பிளாக் செய்ய முடியும்.

3. போன் மற்றும் சர்வீஸ் ஹெல்த் (Phone and Service Health): இதன்கீழ் நெட்வொர்க் வலிமை மற்றும் டிவைஸ் பேட்டரிக்கான நிகழ்நேர நுண்ணறிவுகள் கிடைக்கும்
4. ஆல்வேஸ் அவைலபிள் (Always Available): இதன் கீழ் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் உறுதி செய்யப்படும்.

நினைவூட்டும் வண்ணம் - ஜியோபாரத் போனின் விலை வெறும் ரூ.799 மட்டுமே ஆகும். ஆர்வமுள்ளவர்கள் இதை பிரபல இகாமர்ஸ் தளமான அமேசான் இந்தியா (Amazon India) அல்லது நாடு முழுவதும் உள்ள அதிகாரப்பூர்வ ஜியோமார்ட் வலைத்தளம் (JioMart website) மற்றும் ஜியோ ஸ்டோர்களில் (Jio stores) வாங்கலாம்.

மேலும் ஜியோ நிறுவனமானது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) உடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை விரைவாக டெலிவரியும் செய்து வருகிறது. இவைகள் முற்றிலும் புதிய மொபைல் போன்கள் அல்ல; ஜியோபாரத் போன்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்தியாவில் வாங்க கிடைக்கின்றன.

ஆக பயனர்கள் இப்போது இந்த மொபைல் போனை மிகவும் மலிவு விலைக்கு பெறுவது மட்டுமின்றி, மேற்கண்ட 4 சேஃப்டி பர்ஸ்ட் அம்சங்களையும் பெறுவார்கள். இதன் மூலம் ஜியோபாரத் போன் பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான அனுபவம் கிடைக்கும். குறிப்பாக உங்கள் குடும்பத்தில் உள்ள வயதான நபர்களுக்கு இதை வாங்கி கொடுக்கும் போது, அவர்களுடைய பாதுகாப்பு இன்னும் ஒருபடி மேலே உறுதி செய்யப்படும்.

ஜியோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஐஎம்சி நிகழ்வின் ஒவ்வொரு பதிப்பிலும், ஜியோ பயனர்களுக்காக ஒரு புதிய மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இம்முறை சேஃப்டி பர்ஸ்ட் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஜியோபோன் மற்றும் ஜியோபாரத் தளம் ஆகிய இரண்டும் - இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மற்றும் அதிவேக நெட்வொர்க் பயன்பாட்டை அதிகரிக்க உதவும் மலிவு விலை பீச்சர் போன்களாக திகழ்கின்றன.

ஏற்கனவே மில்லியன் கணக்கான ஜியோ பயனர்கள், இந்த மொபைல் போன்கள் வழியாக யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) சேவை, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை / வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். வெறும் ரூ.799 முதல் கிடைக்கும் ஜியோபாரத் போன்கள் ஆனது எவரும் 4ஜி சேவையை பெறவும், மலிவு திட்டங்களுடன் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்கவும் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இந்த மொபைல் போன் ஜியோ சிம்மில் மட்டுமே செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Announced New Safety First Features For JioBharat Phones Including Location Monitoring
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X