யாரு விடுவா? பட்ஜெட் விலையில் 90 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி வழங்கும் Jio, Airtel திட்டங்கள்: பட்டியல் இதோ..
ஜியோ (jio), ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 90 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளது. நன்மைகள் இதில் உள்ளது.
90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 929 prepaid plan) திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








