ஒரே போன்.. 12200mAh பேட்டரி.. 30 நாட்கள் பேக்கப்.. மெட்டல் பாடி வேற.. மிரண்டு போவீங்க!
ஒரு போன் 30 நாட்கள் நீடிக்கக் கூடிய 12,200mAh பேட்டரி, புயல் அடித்தாலும் தாங்கக்கூடிய மெட்டல் பாடி, நீருக்குள்ளும் வேலை செய்யக் கூடிய கேமரா என்று ராணுவ தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்த போனை உலகின் மிகவும் வலிமையான போன் என்று சொல்வதில் தப்பில்லை.
ஜேசிபி (JCB) நிறுவனத்தை பற்றி யாருக்கும் சொல்லி தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த நிறுவனம் கனரக வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிப்பதில் உலகளவில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் இருந்து எந்த பொருள் உருவாக்கப்பட்டாலும், அது உச்சகட்ட தரம் வாய்ந்ததாக மட்டுமே இருக்கும்.

நீடித்து உழைக்கூடிய அம்சங்களும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோன்று உச்சகட்ட அம்சங்களுடன் ஜேசிபி டஃப்போன் மேக்ஸ் (JCB Toughphone Max) மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன் மழை, வெயில், புயல், குளிர் என்று எதையும் தாங்கக்கூடிய மெட்டல் பாடியை கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், இந்த போனை போல வேறு எந்த போனும் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
ஜேசிபி டஃப்போன் மேக்ஸ் அம்சங்கள் (JCB Toughphone Max Specifications): இந்த போன் ஒரு 5ஜி மாடலாகும். இந்த போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த போனின் பேக் கேமரா ஃபோர் லேயர் செட்டப் கொண்டுள்ளது.
அந்த வகையில், 48 எம்பி மெயின் + 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 0.3 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 20 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity 700) சிப்செட் கொண்டிருக்கிறது.
இந்த போனில் 12,200mAh அளவில் மிகப்பெரும் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 30 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் கார்டு போர்ட் வருகிறது.
ஐபி68 (IP68) தர வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் (Waterproof and Dustproof) கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவ உபகரணங்களுக்கு வழங்கப்படும் மில் ஸ்பெக் 810ஜி (Mil Spec 810G) தர சான்றிதழ் பெற்றுள்ளது. 1.8மீ ஆழத்தில் கடல், ஏரி, குளம், குட்டை என்று எதில் விழுந்தாலும், பல மணி நேரத்துக்கு தாக்குபிடிக்கும்.
2 வருட வாரண்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த போனும் மெட்டல் பாடியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 600 யூரோவாக (இந்திய மதிப்பில் ரூ.62,530) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.
முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும். அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








