Home
Mobile

இவ்ளோ கரடுமுரடா? ராணுவ தரத்தில் மெட்டல் பாடி! புயலே அடிச்சாலும் தாங்கும்! 12,200mAh பேட்டரி வேற! எந்த மாடல்?

கடுமையான மழை, வெயில், குளிர் வந்தாலும், ஏன், புயலே அடித்தாலும் அசராமல் தாங்கங்கூடிய வகையில் ராணுவ தரத்தில் உருவாக்கப்பட்ட ஜேசிபி (JCB) நிறுவனத்தின் ஜேசிபி டஃப்போன் (JCB Toughphone) மற்றும் ஜேசிபி டஃப்போன் மேக்ஸ் (JCB Toughphone Max) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜேசிபி (JCB) நிறுவனம், கனரக உபகரணங்கள் தயாரிப்பில், உலகளவில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஜேசிபி பொக்லைன் வாகனம் எவ்வளவு கரடுமுரடாக இருக்கும் என்பதை யாருக்கும் சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. இந்த கரடுமுரடான உருவாக்கம் மொபைல் போனின் வந்தால், எப்படி இருக்கும்?

கரடுமுரடானா மெட்டல் பாடி! புயலே அடிச்சாலும் தாங்கும்! எந்த மாடல்?

அந்த லெவலில், கரடுமுரடாக உருவாக்கப்பட்ட ஜேசிபி டஃப்போன் (JCB Toughphone) மற்றும் ஜேசிபி டஃப்போன் மேக்ஸ் (JCB Toughphone Max) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் எவ்வளவு தரமாக இருக்குமோ அந்த தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

மழை, வெயில், குளிர் என்று அனைத்தையும் எளிதாக தாங்ககூடிய உபகரணங்களுக்கு வழங்கப்படும் MIL-SPEC 810G தர சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த போன்களின் வெளிப்புறம், பாலிகார்பனேட் மற்றும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீரில் மூழ்கினாலும், பாறையில் விழுந்தாலும், வீசி எறிந்தாலும் பாதுகாப்பாக இருக்கும். இந்த போன்களின் விலை, அம்சங்கள், விற்பனை தேதி விவரங்கள் பின்வருமாறு.

ஜேசிபி டஃப்போன் அம்சங்கள் (JCB Toughphone Specifications): இந்த ஜேசிபி போன் 5.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. கொரில்லா கிளாஸ் புரெக்டெக்ஷன் (Gorilla Glass) கொடுக்கப்பட்டுள்ளது. 20 எம்பி மெயின் கேமரா, 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் மீடியாடெக் ஹீலியோ பி22 (MediaTek Helio P22) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வருகிறது. இந்த ஜேசிபி டஃப்போன் 4,050mAh பேட்டரி கொண்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஜேசிபி டஃப்போன் மேக்ஸ் அம்சங்கள் (JCB Toughphone Max Specifications): இந்த ஜேசிபி மேக்ஸ் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த போனின் பேக் கேமரா செட்டப், 48 எம்பி மெயின் + 16 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity 700) சிப்செட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட் செய்துக்கொள்ள முடியும். இந்த போனில் 12,200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி இருப்பதால், தொடர்ந்து 30 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 600 யூரோவாக (இந்திய மதிப்பில் ரூ.62,530)நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜேசிபி டஃப்போன் விலை, 300 யூரோவாக (இந்திய மதிப்பில் ரூ.31,265) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போன்கள் ஜூலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JCB Toughphone JCB Toughphone Max Specifications, Price Details After Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X