நினைச்சத விட விலை கம்மி..OnePlus 12, OnePlus 12R ஆர்டர் பொளக்க போகுது.. விலை மற்றும் அம்சங்கள்?
இன்று (ஜன.23) இரவு 7.30 மணிக்கு ஒன்பிளஸ் நிறுவனமானது ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் என்கிற வெளியிட்டு நிகழ்வை நடத்துகிறது. இந்நிகழ்வின் என்னென்ன புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது?அவைகளின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் என்ன? இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் நிகழ்வை (Smooth Beyond Belief Event) லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? முன்னரே குறிப்பிட்டபடி, இந்நிகழ்வு இன்று அதாவது ஜனவரி 23 ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. டிக்கெட் வாங்கியதன் வழியாக நேரில் செல்ல முடியாதவர்கள் ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கம் மற்றும் சோஷியல் மீடியா சேனல்களின் வழியாக இந்நிகழ்வின் நேரலையை காணலாம்.

இந்நிகழ்வில் என்னென்ன புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகமாகும்? ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் வெளியீட்டு நிகழ்வில் 3 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகமாகும்: ஒன்பிளஸ் 12 (OnePlus 12), ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3).
ஒன்பிளஸ் 12 இந்திய விலை: நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன அபிஷேக் யாதவ் (@yabhishekhd) ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.64,999 க்கும், 16ஜிபி ரேம் மாஆப்ஷன் ரூ.69,999 க்கும் அறிமுகமாகும் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இது ஜனவரி 30 முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14, 120ஹெர்ட்ஸ் 6.82-இன்ச் குவாட் எச்டி பிளஸ் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், ஹசல்பிளாட் பிராண்டிங் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (50எம்பி + 64எம்பி + 48எம்பி) மற்றும் 32எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் இந்திய விலை: அமெரிக்காவில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்பாடி தோராயமாக ரூ.35,000 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.35,000 க்கும் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.78-இன்ச் ஓரியண்டல் அமோஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட், ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப் (50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா), 16எம்பி செல்பீ கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் இந்திய விலை: சீனாவில் இது ஏற்கனவே அறிமுகமாகி விட்டது. அங்கே ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.5,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்திய விலை நிர்ணயமானது இதைச்சுற்றி தான் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸின் அம்சங்கள்: இது ஃபுல் சார்ஜில் 44 மணிநேர பிளேபேக் டைம், 10 நிமிட சார்ஜில் 7 மணிநேரம் வரையிலான லிசனிங் டைம், ஆக்டிவ் நைஸ் கேன்சலேஷன் (ANC) ஆன் செய்யப்பட்டால் சிங்கிள் சார்ஜில் 6.5 மணிநேரம் பிளேபேக் டைம், சார்ஜிங் கேஸ் வழியாக கூடுதலாக 28 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








