ஒரே நேரத்தில் 15 மலிவு விலை மொபைல்களை வெளியிட்ட அரைஸ்!

Posted By: Staff
ஒரே நேரத்தில் 15 மலிவு விலை மொபைல்களை வெளியிட்ட அரைஸ்!
எலக்ட்ரானிக் சாதனங்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து மகிழ்வித்த அரைஸ் நிறுவனம் இப்போது மொபைல் தாயாரிப்பில் நுழைந்து இருக்கிறது. மலிவு விலையில் மொபைல்களை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பை அரைஸ் வழங்க உள்ளது.

காஷ்மீரில் 15 மொபைல்களை வெளியிட்டுள்ளது அரைஸ். இந்த 15 மொபைல் மாடல்களும் மலிவு விலை மொபைல்கள். இதைத்தொடர்ந்து, தனது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும், வர்த்தகத்தை விரிவாக்கவும் வரும் ஆண்டு 300 கோடி ரூபாயை முதலீடு செய்ய அரைஸ் திட்டமிட்டுள்ளது.

வித விதமான தொழில் நுட்பங்களை இந்த 15 மொபைல்களில் கொடுத்து இருக்கிறது அரைஸ். இந்த மலிவு விலை கொண்ட மொபைல்களில் 2 மொபைல்கள் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பு கொண்டு வாடிக்கையாளர்களை அசத்த வந்துள்ளது. அந்த இரண்டு மொபைல்களும் ஏ-5, டபிள்யூ-1 என்ற பெயர் கொண்டது.

டபிள்யூ-1 டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல். இது 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் துணை புரிகிறது. 2ஜி நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. இந்த 2ஜி வசதி அருமையாக வீடியோ கால் செய்ய பயன்படுகிறது.

அடுத்ததாக இதில் டி-777 என்ற மொபைல் இடம் பெறுகிறது. இது முழு தொடுதிரை வசதியுடன் செயல்படும். இந்த மொபைல்போன் நிச்சயமாக உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோவினையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மொபைலில் 3டி வசதியையும் பெற முடியும்.

இன்னொரு மொபைலான டி-222, கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டிருக்கிறது. சிறந்த தொழில் நுட்பம் வழங்கும் மொபைல்களை வாடிக்கையாளர்கள் நிச்சயம் விரும்புவது சகஜமான விஷயம் தான். ஆனால் அந்த மொபைலை

வாங்க வேண்டும் என்ற எண்ணம், அதன் வடிவமைப்பை பார்க்கையில் வந்துவிடுகிறது என்பதும் உண்மை தான். அதை பொறுத்த வரையில் டி-222 மொபைல் எப்படியும் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்றுவிடும்.

அரைஸ் நிறுவனம் நாடு முழுவதும் 450 விற்பனை மையங்களை கொண்டிருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் 750 மையங்களாக இவை அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அரைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த மலிவு விலை மொபைல்கள் ரூ.990 இருந்து ரூ.4,000 வரையிலான விலையில் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot