Home
Mobile

இந்தியாவில் அறிமுகமான ஐவூம்ஐ மீ 4 மற்றும் மீ 5 (விலை & அம்சங்கள்).!

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இரண்டு சாதனங்களிலும் 4ஜி வோல்ட், ப்ளூடூத், வைஃபை, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரவுகள் உள்ளன.

By Muthuraj

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக அறிமுகமான ஐவூம்ஐ (iVOOMi) நிறுவனம் அதன் மீ 4 மற்றும் மீ மற்றும் மீ 5 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.3,499/- மற்றும் ரூ.4,499/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இந்த இரண்டு சாதனங்களும் ஃப்ளிப்கார்டில் இன்று முதல் கிடைக்கின்றன.

மீ 5 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேயுடன் 1280 x 720 பிக்ஸல் திரை தீர்மானம் கொண்டிருக்கிறது. 2ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு குவாட்-கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மூலம் இது ஆதரிக்கப்படுகிறது.

8 மெகாபிக்சல் பின்புற கேமரா

8 மெகாபிக்சல் பின்புற கேமரா

கேமராவை பொறுத்தமட்டில் இது எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது கார்பன் பிளாக் மற்றும் சாம்பெயின் கோல்ட் ஆகிய நிற வகைகளில் கிடைக்கும்.

1ஜிபி ரேம்

1ஜிபி ரேம்

மீ 4 ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், 4.5 அங்குல டிஸ்ப்ளேயுடன் 854 x 480 பிக்சல்கள் என்ற திரை தீர்மானம் கொண்டு வருகிறது. 1ஜிபி ரேம் உடனான 64 பிட் மீடியாடெக் குவாட் கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது.

5 மெகாபிக்சல் கேமரா

5 மெகாபிக்சல் கேமரா

கேமரா துறையை பொருத்தமட்டில் முன் மற்றும் பின்பக்கமென இருபுறமும் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. பேஸ் பியூட்டி, ஃபேஸ் டிடக்சன் மற்றும் பனோரமா ஆகிய பயன்முறைகளை இதன் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

2000எம்ஏஎச் பேட்டரி

2000எம்ஏஎச் பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி 2000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த சாதனம் ஷாம்பெயின் கோல்ட், ஸ்லேட் ஏஷ் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்கள் கிடைக்கும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இரண்டு சாதனங்களிலும் 4ஜி வோல்ட், ப்ளூடூத், வைஃபை, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரவுகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
iVOOMi Me 4 and Me 5 with Android 7.0 Nougat launched in India, price starts at Rs 3499. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X