Home
Mobile

ரூ.3,999/-க்கு ஐவூம்ஐ மீ 2 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் (அம்சங்கள்).!

இன்று நள்ளிரவு முதல் ஷாப்க்ளூஸ் வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

By Muthuraj

ஐவூம்ஐ நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஐவூம்ஐ மீ 2 என்ற பெயர்கொண்ட இக்கருவி ரூ.3,999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஷாப்க்ளூஸ் வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரூ.3,999/-க்கு ஐவூம்ஐ மீ 2 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் (அம்சங்கள்).!

கருப்பு மற்றும் சாம்பெய்ன் கோல்ட் நிற வகைகளில் வரும் இந்த ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் டபிள்யூவிஜிஏ (WVGA) (480 x 854 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 2ஜிபி ரேம் உடன் இணைந்த க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள் சேமிப்பு கொண்டு வருகிறது.

ரூ.3,999/-க்கு ஐவூம்ஐ மீ 2 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் (அம்சங்கள்).!

புகைப்படங்கள் : டெலிகாம்டால்க்

கேமரா துறையை பொறுத்தமட்டில் இந்த ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோ-ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா கொண்டுள்ளது. 2000எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4ஜி, விஜிஏ, ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

"மிக முக்கியமான சந்தையாக திகழும் இந்தியாவில் இடைப்பட்ட விலையிலான மேலும் பல கருவிகளை மீ வரிசையில் அறிமுகப்படுத்த முயற்சிப்போம். நாட்டிற்குள் நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வதில் எமது முயற்சிகள் அனைத்தையும் முதலீடு செய்து வருகிறோம்"

ரூ.3,999/-க்கு ஐவூம்ஐ மீ 2 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் (அம்சங்கள்).!

"கடந்த இரண்டு காலாண்டுகளில் எங்களால் தொடங்கப்பட்ட சாதனங்க;சாதனங்களின் மீதான மிகப்பெரிய வரவேற்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்று ஐவூம்ஐ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அஷ்வின் பண்டாரி தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
iVoomi Me 2 4G VoLTE smartphone launched with Android Nougat at Rs 3,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X