பிளிப்கார்ட் : பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஐவூம்ஐ ஐ1 & ஐ1எஸ்.!
ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன்கள் 5.45-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு மற்றும் 18:9 விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் ஜனவரி 10-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும்.
எல்ஜி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஐவூம்ஐ ஸ்மார்ட்போன் மாடல்கய் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பிளிப்கார்ட்:
வரும் ஜனவரி 10-ம் தேதி மதியம் 12மணி முதல் இந்த இரண்டு ஸ்மார்ட்போனகள் விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

5.45-இன்ச் டிஸ்பிளே:
ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன்கள் 5.45-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு மற்றும் 18:9 விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

பேட்டரி;
ஐவூம்ஐ ஐ1 மற்றும் ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போன்கள் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது, மேலும் இணையம் போன்ற பல்வேறு அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

விலை:
ஐவூம்ஐ ஐ1 விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது, அதன்பின்பு ஐவூம்ஐ ஐ1எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications