இது ரீலோடட்- போக்கோ எம்2 ரீலோடட் ஏப்ரல் 21 இந்தியாவில் அறிமுகம்: அம்சங்கள் இதோ!
போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21 ஆம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. போக்கோ எம்2 ரீலோடட் அசல் சாதனமானது எம்2 சாதனத்தை போன்று இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன்
போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21 ஆம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. போக்கோ எம்2 ரீலோடட் அசல் சாதனமானது எம்2 சாதனத்தை போன்று இருக்கும் எனவும் ஆனால் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது. போக்கோ சமீபத்தில் இந்தியாவில் போக்கோ எம்3 மற்றும் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

போக்கோ நிறுவனம் தற்போது எம் சீரிஸ்-ல் இடம்பெறும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. போக்கோ எம்2 ரீலோடட் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64 சேமிப்பக வசதி
போக்கோ எம்2 ரீலோடட் அசல் ஸ்மார்ட்போனானது எம்2 போன்ற அதே சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என்றாலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64 சேமிப்பக வசதி கொண்டிருக்கும். அதேபோல் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்கள் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வசதியுடனும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும்
மேலும் போக்கோ இந்தியா டுவிட்டர் கணக்கு மூலம் போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அதேதினத்தில் மாலை 3 மணிக்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் 2340 x 1080 பிக்சல்கள் டிஸ்ப்ளே தெளிவுத்திறனுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது. போக்கோ எம்2 ஏஆர்எம் மாலி-ஜி 52 ஜிபீ விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியுடன் வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே சார்ஜிங்கில் இரண்டு நாட்கள் வரை ஆயுள் நீடிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
போக்கோ எம் 2 ரீலோடட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் அகல கோண சென்சார், 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புற உச்சியில் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா இருக்கிறது.


Click it and Unblock the Notifications