Home
Mobile

18 மணி நேரம் டாக் டைம்! அசத்தும் ஐடிஜி ஸ்மார்ட்போன்!

By Super

18 மணி நேரம் டாக் டைம்! அசத்தும் ஐடிஜி ஸ்மார்ட்போன்!
நவீன தொழில் நுட்பங்களை கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்த நவீன தொழில் நுட்பத்தினை வழங்க, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதை புரிந்து ஐடிஜி நிறுவனம் எக்ஸ்பிபோன்-2 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 ஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்கள் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

4.3 இஞ்ச் அகற்கு திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சர்வ சாதாரணமாக 1924 X 768 திரை துல்லியத்தினை கொடுக்கும். 400 கிராம் எடை கொண்ட எக்ஸ்பிபோன்-2 ஸ்மார்ட்போனை எளிதாக கையாளலாம். விண்டோஸ்-8 இயங்குதளம் எளிதாக இயங்க இதில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டல் ஏட்டம் இசட்-530 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதி வேகத்தில் இயங்கும்.

சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 112 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. இன்னும் இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் 64 ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினை இதன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கும்.

3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். ஆடியோ ப்ளேயரோ, வீடியோ ப்ளேயரோ இதில் சிறப்பாக பயன்படுத்த மல்டிமீடியா வசதியும் உள்ளது. பேட்டரியின் ஆற்றல் எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் மிக அவசியம்.

எக்ஸ்பிபோன்-2 ஸ்மார்ட்போனில் 11.1 டபிள்யூஎச் ரிமூவபுல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 18 மணி நேரம் டாக் டைம் மற்றும் 46 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும்.

இப்படி அற்புதமான தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஐடிஜி எக்ஸ்பிபோன்-2 ஸ்மார்ட்போனின் விலை விவரம் இன்னும் சரியாக

வெளிவரவில்லை. அதோடு இந்த புதிய ஸ்மார்ட்போன், இந்த ஆண்டு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X