ரூ.8000 பட்ஜெட்ல மொத்த கதையை முடித்துவிட்ட itel ஸ்மார்ட்போன்.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐடெல் (itel) நிறுவனம் அதனுடனை ஏ சிரீஸ் மாடல்களில் ஒட்டுமொத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் கதையை முடிக்கும்படியாக ஐடெல் ஜெனோ ஏ100சி (itel Zeno A100C) ஸ்மார்ட்போனை வைத்துள்ளது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தல் தள்ளுபடி போக வெறும் ரூ.8000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் ஸ்மார்டபோனை களமிறக்குவதில் பெரிய பேட்டியே இருக்கிறது. இதனால், அடிமட்ட விலையிலும் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், ரூ.15,000 விலை கொண்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் பீச்சர்களும் பேக் செய்யப்படுகின்றன. இதில் ஐடெல் நிறுவனம், ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவாக ஐடெல் ஜெனோ ஏ100சி ஸ்மார்ட்போனை கொடுக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 2 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட ஐடெல் ஜெனோ ஏ100சி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில் கொடுக்கிறது. ஐசிஐசிஐ மற்றும் பாங்க் ஆப் பரோடா பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1700 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.7,799 விலைக்கு இந்த ஐடெல் ஜெனோ ஏ100சி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
ஐடெல் ஜெனோ ஏ100சி சிறப்பம்சங்கள் ( itel Zeno A100C Specifications): 6.56 இன்ச் ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 380 நிட்ஸ் ஹை பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது.
இதுவொரு வாட்டர் டிராப் (Water Drop) டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 15 கோ (Android Version 15 GO) இந்த ஐடெல் ஜெனோ ஏ100சி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி7100 (Octa Core Unisoc T7100) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது.
இந்த பேட்டரியுடன் 8.49 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐடெல் ஜெனோ ஏ100சி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சிங்கிள் டிடிஎஸ் ஸ்பீக்கர் (Single DTS Speaker) கிடைக்கிறது. சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கொண்ட மாடலாக இந்த ஐடெல் ஜெனோ ஏ100சி ஸ்மார்ட்போன் உள்ளது.
மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military-Grade Durability) கொடுத்துள்ளது. ஆகவே, டிராப் டெஸ்ட் (Drop Test) செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஹை டெம்ப்ரேச்சர் ரெசிஸ்டன்ஸ் (High Temperature Resistance), லோவ் டெம்ரேச்சர் ரெசிஸ்டன்ஸ் (Low Temperature Resistance) கிடைக்கிறது. ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.
மேலும், டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட் கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. டைட்டானியம் கோல்டு (Titanium Gold), ப்யூர் பிளாக் (Pure Black) மற்றும் சில்க் கிரீன் (Silk Green) ஆகிய கலர்களில் இந்த ஐடெல் ஜெனோ ஏ100சி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். பிரீமியம் டிசைனை கொடுத்துள்ளது.
ஆகவே, ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு பிரீமியம் லுக் கொடுக்கும்படியான ஸ்மார்ட்போனுக்கு இந்த ஐடெல் ஜெனோ ஏ100சி மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் லுக் கொடுப்பதால், பட்ஜெட் மாடல் போல பீல் கொடுக்காது. அதிக விலைக்கு வாங்கிய ஸ்மார்ட்போன் போல தெரியும்.


Click it and Unblock the Notifications