Home
Mobile

ஜூன்.10 குறிச்சாச்சு.. அடிமட்ட ரேட்ல IP54 ரேட்டிங்.. 120Hz டிஸ்பிளே.. FREE ஸ்கிரீன் ரீப்ளேஸ்.. எந்த மாடல்?

இந்தியாவில் பட்ஜெட் விலை மாடல்களை களமிறக்கிவரும் ஐடெல் நிறுவனமானது, IP54 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, ஏஐவானா வாய்ஸ் அசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், 100 நாட்களுக்கான ப்ரீ ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் கொடுக்கும் ஐடெல் ஜெனோ 5ஜி (itel Zeno 5G) போனை களமிறக்க இருக்கிறது. இந்த போனில் எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த ஐடெல் ஜெனோ 5ஜி போனானது, அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System), IP54 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏஐவானா ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Aivana AI Voice Assistant) வருகிறது.

ஜூன்.10 குறிச்சாச்சு.. அடிமட்ட ரேட்ல IP54 ரேட்டிங்.. 120Hz டிஸ்பிளே!

இதுபோக டிஸ்பிளேவுக்கு 100 நாட்கள் வரையில் ப்ரீ ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் கொடுக்கிறது. வெறும் 7.8 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேற்கண்ட பீச்சர்களுடன் அமோசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்த தகவல்கள் கிடையாது.

இருப்பினும், இந்த ஐடெல் ஜெனோ 5ஜி போனானது, ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இதற்கு முன்னதாக ஐடெல் நிறுவனத்தில் வெளியான 5ஜி போன்கள் என்று பார்த்தால், ஐடெல் ஏ95 5ஜி (itel A95 5G) மற்றும் ஐடெல் பி55 5ஜி (itel P55 5G) ஆகியவை இருக்கின்றன. இவற்றின் பட்ஜெட்டானது ரூ.10,000ஆக மட்டுமே இருக்கிறது.

ஆகவே, இப்போது வெளியாக இருக்கும் ஐடெல் ஜெனோ 5ஜி போனின் விலையும் அதேபோல இருக்கும். ஆகவே, ரூ.15,000-க்குள் எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னதாக ஜெனோ சீரிஸில் ஐடெல் ஜெனோ 10 (itel Zeno 10) என்னும் மற்றொரு மாடல் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் பீச்சர்கள் மற்றும் விலையை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜூன்.10 குறிச்சாச்சு.. அடிமட்ட ரேட்ல IP54 ரேட்டிங்.. 120Hz டிஸ்பிளே!

ஐடெல் ஜெனோ 10 அம்சங்கள் (itel Zeno 10 Specifications): இந்த ஜெனோ போனில் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் (Android 14 Go Edition OS) மற்றும் ஹைய்ஓஎஸ் 14 (HiOS 14) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்பு யுனிசோக் சிப்செட் கிடைக்கிறது. 8 எம்பி மெயின் கேமரா உள்ளது.

5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் போன்ற பட்ஜெட் பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஜெனோ சீரிஸிலேயே இப்போது ஐடெல் ஜெனோ 5ஜி வெளியாக இருக்கிறது. இந்த போனும் பட்ஜெட் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
itel Zeno 5G With Triple Rear Camera To Launch June 10 in India Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X