SALE பிச்சிக்குது.. ரூ.9299 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கும் கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படி 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டுடன் ஐடெல் ஜெனோ 5ஜி (itel Zeno 5G) போன் வெளியாகி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் ஏஐ பீச்சர்களை கொடுக்கும் இந்த ஐடெல் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐடெல் ஜெனோ 5ஜி அமேசான் விற்பனை (itel Zeno 5G Amazon Sale): இந்த ஐடெல் போனானது, வெளியான வேகத்தில் விற்பனைக்கும் வந்துவிட்டது. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ,10,299ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆகவே, ரூ.9,299 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். இதுபோக ரூ.9,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இந்த ஐடெல் ஜெனோ 5ஜி போனில் ஷேடோ பிளாக் (Shadow Black), கால்க்ஸ் டைட்டானியம் (Calx Titanium) மற்றும் வேவ் கிரீன் (Wave Green) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐடெல் ஜெனோ 5ஜி அம்சங்கள் (itel Zeno 5G Specifications): இந்த ஐடெல் போனில் 6.67 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + லைட் சென்சார் + ஐஆர் பிளாஸ்டர் கிடைக்கிறது. மெயின் கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்களும் இருக்கின்றன. ஆனால், அமேசான் தளத்தில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. சிப்செட்டில் பட்டையை கிளப்புகிறது.
இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (6nm Octa Core Mediatek Dimensity 6300 5G) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.8 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது.
ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஆஸ்க் ஏஐ (Ask AI), டிரான்ஸ்லேட்டர் (Translator), டெக்ஸ்ட் ஜெனரேட்டர் (Text Generator), கிராமர் செக் (Grammar Check) ஸ்மார்ட் சம்மரைசேஷன் (Smart Summarization) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐவானா ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஐடெல் போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
மேலும், சைடு ஃபிங்கர்பிரிண்ட் (Side Fingerprint), பேஸ் அன்லாக் (Face Unlock) போன்ற செக்யூரிட்டி கிடைக்கிறது. ஜி சென்சார் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. ஜிபிஎஸ், ப்ளூடூத், வை-பை, டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்ற வழக்கமான கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. 5ஜி மற்றும் டூயல் 4ஜி சப்போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








