வீட்டுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.5,173 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 13MP கேமரா.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான ஐடெல் ஜெனோ 20 (itel Zeno 20) ஸ்மார்ட்போனானது, வீட்டுக்கு 2 ஆர்டர் போடும்படியான தள்ளுபடியுடன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் பிரீமியம் கொடுக்கும் டிசைன் மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 13 எம்பி கேமரா மற்றும் IP54 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனின் மார்கெட் விலை, தள்ளுபடி விலை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அடிமட்ட பட்ஜெட்டில் பக்கா பீச்சர்கள் மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும் ஸ்மார்ட்போனைகளை களமிறக்குவதில் ஐடெல் நிறுவனமும் தனியிடம் பிடித்துள்ளது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு அடுத்தடுத்து மாடல்களை களமிறக்கி வருகிறது. இதில் ஐடெல் ஜெனோ 20 மாடலானது, ரூ.6000 பட்ஜெட் செக்மெண்டில் வெளியாகியது.

இப்போது, அமேசான் தளத்தில் டிஸ்கவுண்ட் போக மேலும், அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் (5 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.5,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.5,748 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.574.80 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.5,173.20 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த சலுகை போக பழைய மாடல்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ரூ.5,450 வரையில் சலுகை கொடுக்கப்படுகிறது. மற்ற பீச்சர்கள் எப்படி இருக்கிறது?
ஐடெல் ஜெனோ 20 அம்சங்கள் (itel Zeno 20 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு புரொடெக்சன் கிடையாது. ஆனால், ஆன்டி-டிராப் கேஸ் (Anti-drop Case) கிடைக்கிறது. ஆகவே, IP54 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. அதேபோல 270 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட் விலைக்கு ஏற்ப ஆக்டா கோர் யுனிசோக் டி7100 (Octa Core UNISOC T7100) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) ஓஎஸ் கிடைக்கிறது.
இந்த ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனில் ஏவியான 2.0 (Aivana 2.0) ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக வழக்கமாக கிடைக்கும் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் இதிலும் கிடைக்கிறது. எச்டிஆர் (HDR) சப்போர்ட் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதேபோல 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கிறது.
15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆனால், 10W சார்ஜர் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. 3 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலும் மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி அரோரா ப்ளூ (Aurora Blue), ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) மற்றும் ஸ்பேஸ் டைட்டானியம் (Space Titanium) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








