Home
Mobile

அடிச்சான் பாரு ஐடெல்.. ரூ.5,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தனது புதிய ஐடெல் ஜெனோ 20 (Itel Zeno 20) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஐடெல் போன். இப்போது ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐடெல் ஜெனோ 20 அம்சங்கள் (Itel Zeno 20 specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அடிச்சான் பாரு ஐடெல்.. ரூ.5,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஆக்டா கோர் டி7100 (Octa-core T7100) சிப்செட் உடன் ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition)இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

3ஜிபி ரேம் (5ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஐடெல் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

எச்டிஆர் மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 13எம்பி ரியர் கேமரா உடன் ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

பைண்ட் மை போன் (FIND MY Phone), லேண்ட்ஸ்கேப் மோட் (Landscape Mode), டைனாமிக் பார் (Dynamic Bar) போன்ற பீச்சர்களையும் கொண்டுள்ளது ஐடெல் ஜெனோ 20 மாடல். அதேபோல் டிடிஎஸ் சவுண்ட் (DTS sound) ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர ஃபேஸ் அன்லாக் வசதியுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.

அடிச்சான் பாரு ஐடெல்.. ரூ.5,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி உடன் ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவும் இந்த புதிய ஐடெல் ஸ்மார்ட்போனில் உள்ளது.

3ஜிபி ரேம் (5ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64ஜிபி மெமரி கொண்ட ஐடெல் ஜெனோ 20 போனின் விலை ரூ.5,999 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.6,899-ஆக உள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். ஸ்டார்லிட் பிளாக், ஸ்பேஸ் டைட்டானியம் மற்றும் அரோரா ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel Zeno 20 smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X