மொத்த இந்தியாவும் வாங்குமே.. ரூ.5799 க்கு இப்படி ஒரு Phone-ஆ.. 5000mAh பேட்டரி, 8GB ரேம், மிலிட்டரி கிரேட்!
ஐடெல் (Itel) நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆக ஐடெல் ஸேனோ 20 மேக்ஸ் (Itel Zeno 20 Max) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது யுனிசோக் டி7100 சிப்செட், 4ஜிபி வரையிலான ரேம், 5000mAh பேட்டரி, டைனமிக் பார் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஐடெல் ஜெனோ 20 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
- நோட்டிபிகேஷன்களைக் காண்பிப்பதற்கான டைனமிக் பார் அம்சம்
- ஆக்டா-கோர் டி7100 சிப்செட்
- 4ஜிபி வரை ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மெமரி ஃப்யூஷன் அம்சத்துடன், பயன்படுத்தப்படாத கூடுதல் ஸ்டோரேஜை 8ஜிபி ஆன்போர்டு ரேம் ஆக விரிவாக்க முடியும்.

- 13 மெகாபிக்சல் ரியர் கேமரா
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கான ஐபி54 ரேட்டிங்
- MIL-STD-810H இராணுவ-தர ட்யூரபிலிட்டி
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- பேஸ் அன்லாக்
- 15W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- பாக்ஸில் 10W சார்ஜர்
- பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டென்ட்
- டிடிஎஸ் சவுண்ட்
இந்தியாவில் ஐடெல் ஸேனோ 20 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.5,799 என்றும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.6,169 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இது அரோரா ப்ளூ, ஸ்பேஸ் டைட்டானியம் மற்றும் ஸ்டார்லிட் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐடெல் ஸேனோ 20 மேக்ஸ் ஸ்மார்ட்போனானது அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்ட ஐடெல் ஸேனோ 20 மேக்ஸின் மற்றொரு வேரியண்ட் இந்த மாதமே அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஐடெல் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
முன்னதாக அறிமுகமான ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது செல்பீ கேமரா கட்-அவுட்டை சுற்றி பேட்டரி சார்ஜிங் விவரங்கள் மற்றும் இன்கம்மிங் கால் அலெர்ட்ஸ் போன்ற அறிவிப்புகளை காட்டும் டைனமிக் பார் அம்சத்தை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட்டில் இயங்குகிறது. விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சம் வழியாக பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து, இந்த ஸ்மார்ட்போனின் ரேமை 8ஜிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை ஏஐ ஆதரவு (AI Support) கொண்ட 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
கிட்டத்தட்ட ரூ.6000 க்கு அருகிலான பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இது ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) மற்றும் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) ஆகிய 2 வகையான பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. தற்போது இது அமேசான் இந்தியாவில் ரூ.6,499 க்கு (4ஜிபி + 64ஜிபி) வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








