ஜூலை 16-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல PRO ஸ்மார்ட்போன்.. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி.. எந்த மாடல்?
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் பீச்சர்களுக்கு துளியும் குறையில்லாகபடி இந்தியாவின் லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் களமிறங்கி வருகின்றன. இதில் ஜெனோ சீரிஸ் (Zeno Series) மாடல்களில் பட்ஜெட் விலையிலும் பிரீமியம் லுக் கிடைத்தது.
இதனாலேயே அதிக வரவேற்பு பெற்ற மாடல்களாக ஜெனோ சீரிஸ் இருக்கிறது. இந்த வரிசையில் ஜடெல் ஜெனோ 100 ப்ரோ (itel Zeno 100 Pro) ஸ்மார்ட்போன் சேர்ந்துள்ளது. இந்திய மார்கெட்டில் வருகிற ஜூலை 16ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

டிராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance), ஹீட் ரெசிஸ்டன்ஸ் (Heat Resistance) உள்ளிட்ட பல்வேறு ரெசிஸ்டன்ட்களை கொடுக்கும்படி எம்ஐஎஸ்-எஸ்டிடி 810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. இந்த சர்டிபிகேஷன் கொண்ட மாடல்கள் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும். ஆகவே, அதிக டியூரபிலிட்டியை இந்த ஜடெல் ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்.
மல்டி-டிவைஸ் கன்ட்ரோல்களை கொடுக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே அமேசான் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டிசைனை பார்க்கையில், ஐடெல் ஜெனோ 100 (itel Zeno 100) ஸ்மார்ட்போனில் கிடைத்ததை போலவே இருக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக் கொடுக்கும்படியான டிசைனை பட்ஜெட் விலையில் எதிர்பார்க்க முடிகிறது.
ஆகவே, முன்னதாக ஐடெல் ஜெனோ 100 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்த்தால், இந்த ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிடைக்க இருக்கும் பீச்சர்கள் மற்றும் நிர்ணயிக்கப்படும் விலையை யூகிக்க முடியும். டிசைனில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது. கலர்களில் ஏதேனும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.
ஐடெல் ஜெனோ 100 அம்சங்கள் (itel Zeno 100 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7100 12என்எம் (Octa Core UNISOC T7100 12nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. பட்ஜெட் விலை மாடல்களில் கிடைக்கும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) ஓஎஸ் கிடைக்கிறது.
6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஐடெல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும் டைனாமிக் பார் (Dynamic Bar) கொடுக்கப்பட்டு உள்ளது. 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரியை இந்த ஐடெல் ஜெனோ 100 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐடெல் ஜெனோ 100 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், MIL-STD-810H சர்டிபிகேஷன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் வெளியானபோது, 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.10,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications