Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.8,599 போதும்.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. இதில் டிசைன் மட்டும் பிரீமியமாக இருந்தால் போதும், விற்பனையும் பட்டையை கிளப்பிவிடும். இப்படியான விலை மற்றும் டிசைனுடன் ஐடெல் ஜெனோ 100 ப்ரோ (itel ZENO 100 Pro) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

ஐடெல் ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், ஜெனோ 10000mAh பவர் பேக் மற்றும் ஜெனோ 20000mAh பவர் பேங்க் ஆகிய மாடல்கள் இந்தியாவில் வெளியாகி இருக்கின்றன. இதில் ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு வந்திருக்கும் ஐடெல் ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.8,599 போதும்.. 5000mAh பேட்டரி!

ஐடெல் ஜெனோ 100 ப்ரோ அம்சங்கள் (itel ZENO 100 Pro Specifications): 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி பேக் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக கிடைக்கும் டைனாமிக் பார் (Dynamic Bar) கிடைக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி7100 12என்எம் (Octa Core UNISOC T7100 12nm) என்கிற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) ஓஎஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

8 எம்பி ரியர் கேமராவை இந்த ஐடெல் ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதில் ஜிசி08ஏ8 (GC08A8) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஜிசி05ஏ2 (GC05A2) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக கிடைக்கிறது.

5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் விலையிலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொடுத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஐடெல் ஜெனோ 100 ப்ரோ விற்பனைக்கு வருகிறது.

4ஜி ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கிறது. ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5 (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளுடன் கிடைக்கிறது. கோமட் ஆரஞ்ச் (Comet Orange), நேச்சுரல் பிளாக் (Natural Black) மற்றும் கிளவுட் ஒயிட் (Cloud White) ஆகிய கலர்களில் இந்த ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இந்திய மார்கெட்டில் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,599 ஆக மட்டுமே இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைத்த ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் கம்மியான பட்ஜெட்டில் இந்த ஐடெல் ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பதால், விற்பனையில் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
itel ZENO 100 Pro With 3GB RAM 8MP Rear Camera Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X