என்னது.. இந்த போன் இப்போ ரூ.4,769 தானா.. போட்றா 2 ஆர்டர்.. Amazon Summer Sale-ஐ அலறவிடும் Itel போன்!
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 (Amazon Great Summer Sale 2025) விற்பனையின் ஒரு பகுதியாக ஐடெல் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஒன்று ரூ.5000 க்கும் குறைவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. அதென்ன ஸ்மார்ட்போன் அதன் அசல் விலை நிர்ணயம் என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா?
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஐடெல் ஸெனோ 10 (Itel Zeno 10) ஸ்மார்ட்போனை பற்றித்தான். அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 விற்பனையின் ஒரு பகுதியாக, ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போனின் பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.6,899 க்கு பதிலாக 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.5,799 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் கூடுதல் வங்கி சலுகையின் கீழ் ரூ.4,769 க்கு வாங்க முடியும் என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது.

ஐடெல் ஸேனோ 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சமீபத்திய ஐடெல் ஸ்மார்ட்போன்களை போலவே, இதிலும் செல்பீ கேமரா கட்அவுட்டை சுற்றி பேட்டரி சார்ஜிங் விவரங்கள் மற்றும் இன்கம்மிங் கால் எச்சரிக்கைகள் போன்ற அறிவிப்புகளைக் காட்டும் டைனமிக் பார் அம்சம் முள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட்டில் இயங்குகிறது. விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து, இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்க முடியும். கேமராக்களை பொறுத்தவரை ஏஐ ஆதரவு கொண்ட 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது
முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது மற்றும் இது ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கிறது. கடைசியாக ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 மிஸ் பண்ண கூடாத வேறு சில மொபைல் ஆபர்கள்: டெக்னோ பாப் 9 (Tecno Pop 9): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.8,499 க்கு பதிலாக ரூ.5,490 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.15,999 க்கு பதிலாக ரூ.11,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.13,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








