ஆளுக்கு 3 வாங்கலாமே.. ரூ.6000 க்கு 12GB ரேம், டைனமிக் பார், ZENITHAL டிசைன்.. ஜன.9 முதல் விற்பனை.. எந்த மாடல்?
2025 ஆம் ஆண்டின் ஆரம்பமே பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் நிரம்பி வழியும் என்பது போல் தெரிகிறது. ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட் பிரிவில் மோட்டோ ஜி05 4ஜி (Moto G05 4G) மற்றும் ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஐடெல் நிறுவனம், அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக, வருகிற ஜனவரி 9 ஆம் தேதியன்று ரூ.6000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அது ஐடெல் ஸெனோ 10 (Itel Zeno 10) ஸ்மார்ட்போனாகும்.

ஏற்கனவே ஐடெல் நிறுவனம் அதன் ஐடெல் ஏ80 (Itel A80) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை 'டீஸ்' செய்து வருவதும், இந்த ஸ்மார்ட்போனும் கூட ரூ.10,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தான் ஜெனித்தல் டிசைன் (Zenithal Design) உடன், ஜென்-ஸீ வாடிக்கையாளர்களை இலக்காக கொண்ட என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக ஐடெல் ஸெனோ 10 மாடல் அறிமுகமாகிறது.
என்ன விலைக்கு வரும்? அமேசான் இந்தியாவின் மைக்ரோசைட்டின் படி ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5XXX ஆக இருக்கும். அதாவது இது ரூ.5499 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் அல்லது ரூ.5799 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் அல்லது ரூ.5,999 க்கு கூட அறிமுகம் செய்யப்படலாம் என்று அர்த்தம். ஆனால் எப்படி பார்த்தாலும் இதன் விலை ரூ.6000 க்குள் தான் இருக்கும்.
எப்போது முதல் விற்பனை? ரூ.5XXX என்பது - அறிமுக விலை நிர்ணயம் ஆக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அதாவது அறிமுகமான சில நாட்களுக்கு மட்டும் ரூ.6000 க்கும் என்கிற விலைக்கு வாங்க கிடைக்கலாம். பின்னர் அசல் விலைக்கு திரும்பலாம். இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
என்னென்ன அம்சங்கள்? அமேசான் இந்தியாவில் பகிரப்பட்டுள்ள ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களின் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையும் மற்றும் சில முக்கிய அம்சங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஐடெல் ஸெனோ 10 ஆனது, அதன் பேக் பேனலில், மேல் இடது மூலையில் வட்டமான விளிம்புகளுடன் ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட்டை கொண்டுள்ளது
அந்த கேமரா யூனிட்டில் எல்இடி ஃபிளாஷ் யூனிட்டுடன் இரண்டு கேமரா சென்சார்களை காண முடிகிறது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஆனது ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன. டிஸ்பிளேவில் குறுகிய பெஸல்களே இருக்கும் என்பது போல் தெரிகிறது அனால் ஸ்மார்ட்போனின் 'சின்' (கன்னம்) சற்று தடினமானதாக இருக்கிறது
செல்பீ கேமராவிற்கான சென்சார் டிஸ்பிளேவின் மேல் மையத்தில் உள்ள ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவின் மேல் பக்கத்தில் டைனமிக் தீவு போன்ற பார் ஒன்றையும் காண முடிகிறது. ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி வழக்கமான ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 12ஜிபி அளவிலான ரேம்-ஐ வழங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை மை ஸ்மார்ட் ப்ரைஸ் (MySmartPrice) வலைதளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் அனுப்பப்படலாம் மற்றும் இது 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம். மீதமுள்ள அம்சங்கள் குறித்த எந்த விவரங்களும் இல்லை. அவைகள் ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 12 மணி விற்பனைக்கு முன்பாக அல்லது விற்பனையின் போது வெளிப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








