ரூ.2000 விலை குறைப்பு.. இப்போ ரூ.5399 தான்.. 8GB ரேம், 5000mAh பேட்டரி, 6.56-இன்ச் டிஸ்பிளே, AI கேமரா!
ரூ.6799 க்கு இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆன இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 (Infinix Smart 10) மாடலின் இந்திய விற்பனை தொடங்கியுள்ள மறுகையில் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ஐடெல் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.2000 விலை குறைப்பை அறிவித்து அதை ரூ.5399 க்கு விற்கிறது!
அது ஐடெல் ஸெனோ 10 (Itel Zeno 10) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Freedom Festival Sale 2025) இன் ஒரு பகுதியாக, அதன் அசல் விலையான ரூ.7399 க்கு பதிலாக ரூ.5399 க்கு வாங்க கிடைக்கிறது. இது பேங்க் மற்றும் கூப்பன் ஆபர் ஆகியவற்றை உள்ளடக்கிய விலையாகும்.

ஐடெல் ஸெனோ 10 விரிவான அம்சங்கள் (Itel Zeno 10 Specifications and Features): டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது செல்பீ கேமரா கட்-அவுட்டை சுற்றி பேட்டரி சார்ஜிங் விவரங்கள் மற்றும் இன்கம்மிங் கால் அலெர்ட்ஸ் போன்ற அறிவிப்புகளை காட்டும் டைனமிக் பார் அம்சத்தை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட்டில் இயங்குகிறது. விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து, இந்த ஸ்மார்ட்போனின் ரேமை 8ஜிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை ஏஐ ஆதரவு கொண்ட 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
தற்போது ரூ.6000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இது ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகிய 2 பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது. கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Infinix Smart 10 Major Specifications):
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 15.1 ஓஎஸ்
- 6.67-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- ஆக்டாகோர் யுனிசாக் டி7250 சிப்செட்
- 4ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
- 8 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்
- 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- 15W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி
- ஐபி64 ரேட்டிங் தூசி மற்றும் ஸ்பிளாஸ்-எதிர்ப்பு
- டிடிஎஸ் ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்ஸ்
இதேபோல சற்றே பழைய ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போனும் கூட ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைதளத்தில் நடக்கும் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025 இன் ஒரு பகுதியாக அதன் எம்ஆர்பி விலையான ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.3000 விலை குறைப்பை பெற்றுள்ளது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Redmi A4 5G Major Specifications):
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட்
- 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
- 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரி.


Click it and Unblock the Notifications








