Home
Mobile

6GB RAM உடன் மலிவு விலையில் வரும் ஒரே போன் itel Vision 3 Turbo மட்டுமே.! என்னென்ன அம்சங்கள்.!

itel நிறுவனம், செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியச் சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் itel Vision 3 Turbo என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக மிகவும் மலிவான விலையில் டீசெண்டான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் வருகிறதா?

itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் வருகிறதா?

itel Vision 3 Turbo என்ற இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. இல்லை, இல்லை மிகவும் மலிவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலைக்கு ஏற்ற சிறப்பான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருந்தாலும், இந்த சாதனத்தின் மிகவும் சிறப்பம்சமான அம்சம் என்னவென்றால், மலிவான விலையில் 6ஜிபி ரேம் உடன் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் போனா? அதுவும் இப்படி ஒரு மலிவு விலையிலா?

6ஜிபி ரேம் போனா? அதுவும் இப்படி ஒரு மலிவு விலையிலா?

itel Vision 3 Turbo டிவைஸ் மட்டுமே அதன் விலைப் பிரிவில் 6ஜிபி ரேம் வழங்கும் ஒரே சாதனமாக இந்தியாவில் வாங்கக் கிடைக்கிறது. உண்மையை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த டிவைஸ் 3 ஜிபி ரேம் உடன் தான் வருகிறது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த ஐடில் மெமரியில் இருந்து கூடுதலாக 3ஜிபி கடன் வாங்கிக்கொண்டு, இது 6ஜிபி ரேம் போனாக செயல்படுகிறது.

புதிய itel Vision 3 Turbo ஸ்மார்ட்போனின் தரமான பெர்பார்மன்ஸிற்கு இது தான் காரணமா?

புதிய itel Vision 3 Turbo ஸ்மார்ட்போனின் தரமான பெர்பார்மன்ஸிற்கு இது தான் காரணமா?

இந்த புதிய itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் UNISOC SC9863A ஆக்டா கோர் சிப்செட் உடன் செயல்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 OS இல் இயங்குகிறது. இதில் கூடுதல் ரேம் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனின் அனுபவம் மிகவும் மென்மையாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது. இந்த விலை பிரிவில் இப்படி ஒரு பெர்பார்மர் போனை நீங்கள் பார்க்க முடியாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சரி இந்த டிவைஸின் முக்கியமான சிறப்பம்சம் பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.

itel Vision 3 Turbo சிறப்பம்சம்

itel Vision 3 Turbo சிறப்பம்சம்

இந்த itel Vision 3 Turbo சாதனம் 6.6' இன்ச் கொண்ட LCD IPL டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. இது எச்டி+ தெளிவுத்திறன் உடன் 2.5D கர்வுட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. அதேபோல், இந்த itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் 8MP கொண்ட AI டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 6ஜிபி வரையிலான ரேம் ஆதரிக்கிறது.

அல்டிமேட் பாதுகாப்புடன் பாஸ்ட் சார்ஜிங் அம்சம்

அல்டிமேட் பாதுகாப்புடன் பாஸ்ட் சார்ஜிங் அம்சம்

இந்த சாதனம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் பெரிய 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இது ரிவர்ஸ் சார்ஜிங், இன்டெலிஜெண்ட் பவர் மேனேஜ்மேண்ட் மற்றும் AI பவர் மாஸ்டர் போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பிற்காக, பின்புறத்தில் பிரிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக்கையும் இந்த சாதனம் ஆதரிக்கிறது.

itel Vision 3 Turbo விலை என்ன?

itel Vision 3 Turbo விலை என்ன?

itel வாங்குபவர்களுக்கு "ஒன் டைம் ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் ஆஃபர்" என்ற சேவை உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்குகிறது, இது சாதனத்தை இலவசமாக வாங்கிய 100 நாட்களுக்குள் உடைந்த டிஸ்பிளே ஸ்கிரீனை ரீப்ளேஸ்மென்ட் செய்ய வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. இந்த சாதனம் மல்டி கிரீன், ஜூவல் ப்ளூ மற்றும் டீப் ஓஷன் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இத்தகைய அம்சங்களை கொண்ட இந்த itel Vision 3 Turbo விலை வெறும் ரூ. 7,699 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
itel Vision 3 Turbo Launched In India With Up To 6GB RAM At a Price Of Rs 7699
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X