Home
Mobile

ரூ.7,999-விலையில் ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இப்போது ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஐ

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனை அமேசான்,
பிளிப்கார்ட் மற்றும் ஐடெல் வலைதளத்தில் வாங்க முடியும். குறிப்பாக பச்சை,நீலம், கருப்பு நிறங்களில் இந்த புதிய ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐடெல் விஷன் 3 ஸ்

ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720x1600 பிக்சல் தீர்மானம்,480 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனில்

புதிய ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடெல் விஷன் 3 ஸ்மா

இந்த புதிய ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள

ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ஐடெல் விஷன் 3 ஆனது 18 வாட்பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ரீடர், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய
ஸ்மார்ட்போன்.

 விஷன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஐடெல் விஷன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா + ஏஐ கேமரா என இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பனோரமா மோட், போர்ட்ரெயிட் மோட், லோ-லைட் மோட், எச்டிஆர் மோட் என பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எ

4ஜி எல்இடி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Itel Vision 3 launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X