ரூ. 7,499 விலையில் அருமையான ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன்.. மலிவு விலையில் ஒரு நல்ல சாய்ஸ்..

|

பிப்ரவரி 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐடெல் விஷன் 1 இன் அடுத்த நிலை ஸ்மார்ட்போனாக ஐடெல் விஷன் 2 இந்தியாவில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் இரண்டிலும் அதன் முன்னோடிக்கு மேலான சில மேம்பாடுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளி வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் முழு விபர தகவலைப் பார்க்கலாம்.

ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன்

ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன்

ஐடெல் விஷன் 2 இப்போது செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட்அவுட் டிசைனைக் கொண்டுள்ளது. இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது சுற்றிலும் ஒப்பீட்டளவில் தடிமனான பெசல் உடன் அடர்த்தியான டிசைனை கொண்டுள்ளது. இந்த புதிய ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் என்ன விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போனின் விலை

இந்தியாவில் ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போனின் விலை

ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன் டீப் ப்ளூ மற்றும் கிரேடேஷன் கிரீன் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ. 7,499 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் இப்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது உதான் (Udaan) மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக பிரத்தியேகமாகக் கிடைக்கிறது.

ஐடெல் விஷன் 2 விவரக்குறிப்புகள்

ஐடெல் விஷன் 2 விவரக்குறிப்புகள்

ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பில் இயங்குகிறது. இது 6.6 அங்குல எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,600 பிக்சல்கள் உடைய டிஸ்ப்ளே திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. ஐடெல் விஷன் 2 டிஸ்பிளே 20: 9 விகிதத்துடன், 450 நைட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. மேலும், இந்த டிஸ்பிளே 90 சதவீதம் டிஸ்பிளே-பாடி விகிதத்தை ஆதரிக்கிறது. ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன் 1.6GHz வேகத்தில் பெயரிடப்படாத ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் டெப்த் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களைப் பொறுத்த வரையில் இது VoWi-Fi, இரட்டை செயலில் 4G VoLTE, GPS, புளூடூத் மற்றும் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

4,000 எம்ஏஎச் பேட்டரி

4,000 எம்ஏஎச் பேட்டரி

ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இந்த பேட்டரி 26 மணிநேர அழைப்பு நேரத்தையும், 35 மணிநேர மியூசிக் பிளேபேக் நேரத்தையும் மற்றும் 7 மணிநேர வீடியோ பிளேபேக் நேரத்தையும் இந்த ஸ்மார்ட்போன் பேட்டரி வழங்குகிறது. மலிவு விலையில் அதிக அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பயனர்கள் நிச்சயமாக இந்த புதிய ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன் மாடலை கருத்தில்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Itel Vision 2 With Triple Rear Cameras Launched in India at Rs 7499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X