பிரத்யேக பாதுகாப்பு அம்சம்: ஐடெல் விஷன்1 3ஜிபி ரேம்., பட்ஜெட் விலைதான்!
ஐடெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஷன் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய ஐடெல் விஷன் 1 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் கூடுதல் அம்சம் அதாவது 3 ஜிபி ரேம் வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ப்ளூ மற்றும் கிரேடேஷன் பர்பில்
இந்த சாதனம் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பர்பில் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.08-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் ஆனது 6.08-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம், 500nits பிரைட்நஸ், 19:5:9 என்ற திரைவிகிதம்,2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc SC9863A பிராசஸர் வசதியுடன் IMG8322ஜிபயு ஆதரவையும் கொண்டது.

8 எம்பி பிரைமரி கேமரா
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 8 எம்பி பிரைமரி லென்ஸ்+ 0.08எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000 எம்ஏஎச் பேட்டரி
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் மாடலில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, டூயல்-சிம்,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், புளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
ஐடெல் விஷன் 1 சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஐடெல் விஷன் 1 விலை
ஐடெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஷன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் மென்பொருள் அம்சங்களோ வெளிவந்தது. இதன் அடுத்த அம்சமான 3 ஜிபி ரேம் மாடல் நாளை அறிமுகமாகும் என்று இது பிளிப்கார்டில் பிரத்யேக விற்பனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications