ரூ. 6,599 விலையில் புதிய iTel விஷன் 1 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.. எப்படி வாங்கலாம்?

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்பொழுது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை விட மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கே மவுசு அதிகமாக உள்ளது. அதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்றால் இப்போது இந்தியர்களுக்கு அதிக பிரியம். அப்படி, சமீபத்தில் பிரபலம் அடைந்து வரும் தயாரிப்பு நிறுவனம் தான் iTel. iTel நிறுவனத்தின் புதிய Vision 1 Pro என்ற மலிவு விலை ஸ்மார்ட்போன் பற்றிய பதிவு தான் இது.

 Vision 1 Pro ஸ்மார்ட்போன்

Vision 1 Pro ஸ்மார்ட்போன்

சமீபத்தில் விஷன் 1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்திய பின்னர், ஐடெல் நிறுவனம் இப்போது இந்தியாவில் புதிய Vision 1 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐடெல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய போனிற்கு விஷன் 1 புரோ என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் வெறும் ரூ. 6,599 என்ற விலையில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்துள்ளது.

எங்கு வாங்கலாம்?

எங்கு வாங்கலாம்?

புதிய iTel Vision 1 Pro ஸ்மார்ட்போன் ஆரோ ப்ளூ மற்றும் ஓசன் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஐடெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வலைத்தளத்திலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..

புதிய iTel Vision 1 Pro போனின் சிறப்பம்ச விபரங்கள்

புதிய iTel Vision 1 Pro போனின் சிறப்பம்ச விபரங்கள்

  • 6.52' இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
  • 2.5D கர்வுடு கிளாஸ்
  • குவாட் கோர் சிப்செட்
  • 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • AI டிரிபிள் கேமரா அமைப்பு
  • 8 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
  • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
  • 2 மெகா பிக்சல் சென்சார்
  • 5 மெகா பிக்சல் செல்பி சென்சார்
  • கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக்
  • 4,000 எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரி
  • 4,000 எம்ஏஎச் பேட்டரி

    4,000 எம்ஏஎச் பேட்டரி

    இது 4,000 எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரியை கொண்டுள்ளது. விஷன் 1 ப்ரோ பேட்டரி, 24 மணிநேர பயன்பாடு, ஏழு மணிநேர வீடியோ, ஆறு மணிநேர கேமிங், 800 மணிநேர ஸ்டான்பை மற்றும் 35 மணிநேரம் இசை அனுபவத்தை வழங்குகிறது.

    கேமரா

    கேமரா

    இத்துடன், ஸ்மார்ட்போன் AI பியூட்டி மோடு, போட்ரைட் மோடு, ப்ரோ மோடு, லோ-லைட் மோடு மற்றும் எச்டிஆர் மோடு போன்ற பல மோடுகளை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் போன்ற இரட்டை பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் ஒரு பாதுகாப்பு கேசும் வழங்கப்பட்டுள்ளது.

     ப்ளூடூத் ஹெட்செட்

    ப்ளூடூத் ஹெட்செட்

    யூசர் மேனுவல், யூ.எஸ்.பி கேபிள், மற்றும் உத்தரவாத அட்டை ஆகியவை பாக்சுடன் வருகிறது. மேலும், இப்போது ஸ்மார்ட்போன் ஒரு ஆரம்பக்கால சலுகையுடன் வருகிறது, இப்போது வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் இலவசமாக மோனோ ப்ளூடூத் ஹெட்செட் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Itel Vision 1 Pro With Quad-Core SoC, Triple Rear Cameras Launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X