ரூ.6,599 மட்டுமே: அட்டகாச அம்சங்களோடு ஐடெல் விஷன் 1 ப்ரோ அறிமுகம்!

|

ஐடெல் விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐடெல் விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போன்

ஐடெல் விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போன்

ஐடெல் விஷன் தொடரின் புதிய ஐடெல் விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு உள்ளிட்ட கூடுதல் ஆதரவுகளுடன் வருகிறது.

ஐடெல் விஷன் 1 ப்ரோ விலை

ஐடெல் விஷன் 1 ப்ரோ விலை

ஐடெல் விஷன் 1 ப்ரோ விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,599 என்ற விலையில் கிடைக்கிறது. ஐடெல் விஷன் 1 ப்ரோ மைக்ரோமேக்ஸ் 1பி, லாவா இசட் 2 ஆகிய சாதனங்களுடன் போட்டிப்போடும் விதமாக களமிறங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ மற்றும் ஓஷன் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

ஐடெல் விஷன் 1 ப்ரோ அம்சங்கள்

ஐடெல் விஷன் 1 ப்ரோ அம்சங்கள்

ஐடெல் விஷன் 1 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கோர் செயலியுடன் வருகிறது. மேலும் செயலியின் முழுவிவரம் தெளிவாக தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது.

ஐடெல் விஷன் 1 ப்ரோ இணைப்பு ஆதரவுகள்

ஐடெல் விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. ஐடெல் விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ITel Vision 1 Pro Smartphone Launched in India at a Budget Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X