Home
Mobile

Itel Vision 1: டூயல் கேம் + 4000எம்ஏஎச் பேட்டரி: ரூ.5,499-விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஐடெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஷன் தற்சமயம் புதிய ஐடெல் விஷன் 1 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பர்பில் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஐடெல் விஷன் 1

ஐடெல் விஷன் 1

வெளிவந்த ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் ஆனது 6.08-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம், 500nits பிரைட்நஸ், 19:5:9 என்ற திரைவிகிதம்,2.5டிவளைந்த கண்ணாடி ஆதரவு என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

ஆக்டோ-கோர் Unisoc SC9863A

ஆக்டோ-கோர் Unisoc SC9863A

இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc SC9863A பிராசஸர் வசதியுடன்IMG8322ஜிபயு ஆதரவையும் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம்; வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஐடெல் விஷன் 1 கேமராக்கள்

ஐடெல் விஷன் 1 கேமராக்கள்

ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 8எம்பி பிரைமரி லென்ஸ்+ 0.08எம்பி செகன்டரி சென்சார் எனமொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் மாடலில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, டூயல்-சிம்,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், புளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஐடெல் விஷன் 1 சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

 ஐடெல் விஷன் 1 விலை

ஐடெல் விஷன் 1 விலை

ஐடெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஷன் கொண்டுவந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் மென்பொருள் அம்சஙளுடன் வெளிவந்துள்ளது..

ரூ2,200வரை கேஷ்பேக்

ரூ2,200வரை கேஷ்பேக்

மேலும் ஐடெல் விஷன் 1 சாதனத்துடன் ரூ .799 மதிப்புள்ள இலவச ஐடெல் ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்செட்டை வழங்குகிறது இந்நிறுவனம். மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் 2,200வரை கேஷ்பேக் சலுகை மற்றும் டேட்டா சலுகைகள்இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel Vision 1 Launched in India for Rs 5,499 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X