Home
Mobile

NOKIA-வ பாத்த மாதிரி இருக்கு.. 2000mAh பேட்டரி.. 2 மீ ஆன்டி-ஃபால் புரொடெக்சன்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

நேக்கியா நிறுவனத்தின் பீச்சர் போன்களில் கிடைத்த டியூரபிலிட்டி பீச்சர்களுக்கு நிகராக ஐடெல் டஃப் (itel Tough) போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2000mAh பேட்டரி, 2 மீட்டர்களுக்கு ஆன்டி-ஃபால் புரொடெக்சன் கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐடெல் டஃப் பீச்சர் போன் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்களில் கிடைக்காத டியூரபிலிட்டியை பீச்சர் போன்களில் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க விரும்பும் கஸ்டமர்களும் பீச்சர் போன்களுக்கு செல்கின்றனர். இதனாலேயே பீச்சர் போன்களுக்கு இருக்கும் வரவேற்பை இன்றளவும் குறையாமல் இருக்கிறது. இந்த வரிசையில் ஐடெல் டஃப் சேர்ந்துள்ளது.

NOKIA-வ பாத்த மாதிரி இருக்கு.. 2000mAh பேட்டரி.. 2 மீ ஆன்டி-ஃபால்!

இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இந்த ஐடெல் டஃப் பீச்சர் போனுக்கு 2 மீட்டர்களுக்கான ஆன்டி-ஃபால் புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, 2 மீட்டர்கள் உயரத்தில் இருந்து விழுந்தாலும் தாக்குப் பிடிக்கும். மேலும், IP54 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance), ப்ரீ-ப்ரூப் சிலிகான் கேஸ் (Free Shock-proof Silicone Case) கிடைக்கிறது.

விவசாயம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள அக்ரி பட்டன் (Agri Button) கிடைக்கிறது. டுயல் - லேம்ப் டார்ச் (Dual-Lamp Torch) கிடைக்கிறது. சூப்பர் சவுண்ட்பாக்ஸ் (Super Soundbox) கிடைக்கிறது. ஆகவே, வால்யூம் அதிகமாக கொண்ட ஸ்பீக்கர் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும். கிங் வாய்ஸ் (King Voice) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுவொரு ஆடியோ அசிஸ்டன்ஸ் மாடலாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகள் சப்போர்ட் கிடைக்கிறது. வயர்லெஸ் எப்எம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பில்ட்-ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆட்டோ கால் ரெக்கார்டிங் (Auto Call Recording) கொண்ட மாடலாகவும் இந்த ஐடெல் டஃப் பீச்சர் போனில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் டஃப் அம்சங்கள் (itel Tough Specifications): 2.4 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. 4 எம்பி ரேம் + 4 எம்பி மெமரியை இந்த ஐடெல் டஃப் பீச்சர் கிடைக்கிறது. 3.5 எம்எம் இயர்போன் ஜாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C) சப்போர்ட் கொண்ட 2000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. சூப்பர் பேட்டரி மோட் (Super Battery Mode) கிடைக்கிறது.

32 ஜிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் சிங்கிள் சிம் சிலாட் (SIM Slot) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 500 கான்டெக்ட்களை சேர்த்து கொள்ளலாம். 250 எஸ்எம்எஸ்களை ஸ்டோர் செய்து வைத்துள்ளது. ஏஐ நாய்ஸ் கேன்லேஷன் (AI Noise Cancellation) கொண்ட மாடலாக இந்த ஐடெல் டஃப் பீச்சர் போன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, வாய்ஸ் கால்களின் போது பேக்கிரவுண்ட்டில் இருக்கும் நாய்ஸ் கன்ட்ரோல் செய்யப்படும். பிளாக் (Black), டீப் ப்ளூ (Deep Blue) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ. 1,499 விலைக்கு இந்த ஐடெல் டஃப் பீச்சர் போன் கிடைக்கிறது. இப்போது ரீடெயில் ஸ்டோர்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆன்லைன் ஸ்டோர்களில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம். பிரீமியம் லுக் மட்டுல்லாமல், டியூரபிலிட்டியும் கொண்ட பீச்சர் போன் வேண்டுமானால், இந்த ஐடெல் டஃப் பீச்சர் போனை வாங்கி கொள்ளலாம். 2ஜி கனெக்டிவிட்டியை இந்த பீச்சர் போன் கொடுத்துள்ளது. இதுபோன்ற செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை பின் தொடருங்கள்.

Best Mobiles in India

English summary
itel Tough With 2000mAh Battery Launched in India Under Rs 1500 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X