1-க்கு 2 வாங்குவீங்க.. ரூ.2,099-க்கு 4G போன்.. 2000mAh பேட்டரி.. 3 இன்ச் டிஸ்பிளே.. VGA கேமரா.. எந்த மாடல்?
ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி மேக்ஸ் (itel Super Guru 4G Max) போனானது அடிமட்ட விலைக்கு இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், 2000mAh பேட்டரி, 3 இன்ச் டிஎப்டி டிஸ்பிளே மற்றும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கொடுக்கிறது. இந்த சூப்பர் குரு 4ஜி மேக்ஸ் போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் எவ்வளவு ஸ்மார்ட்போன்கள் வந்தாலும், பீச்சர் போன்கள் மீதான வரவேற்பு குறையவில்லை. இதனாலேயே, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அடிக்கடி பீச்சர் போன்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. இதில் ஐடெல் (itel) நிறுவனம், கம்மியான விலைக்கு 4ஜி கனெக்டிவிட்டியுடன் கூடிய பீச்சர் போன்களை வெளியிட்டு வருகிறது.

இப்போது, ஐடெல் சூப்பர் குரு 4ஜி மேக்ஸ் போனை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, வெளியான ஐடெல் சூப்பர் குரு 4ஜி போனின் அடுத்த வெர்ஷனாக வெளியாகி இருப்பதால், டிஸ்பிளே, வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. கிங்வாய்ஸ் (Kingvoice) என்னும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கிடைக்கிறது.
இந்த அசிஸ்டன்ட் மூலம் கால் கன்ட்ரோல் (Call Control), டயலிங் நம்பர் (Dialling Number), இன்ஸ்டன்ட் ரீடிங் (Instant Reading) மற்றும் டைம் அப்டேட் (Time Update) போன்றவற்றை செய்து கொள்ளலாம். இந்தியாவில் இருக்கும் 13 மொழிகளில் இந்த ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் செயல்படுகிறது. ஆகவே, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் இருக்கின்றன.
மேலும், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் வாய்ஸ் அசிஸ்டன்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஆட்டோ கால் ரெக்கார்டிங் (Auto Call Recording) மற்றும் கிளவுட் போன் ஆப் (Clound Phone App) போன்ற ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐடெல் சூப்பர் குரு 4ஜி மேக்ஸ் அம்சங்கள் (itel Super Guru 4G Max Specifications): இந்த பீச்சர் போனில் 3 இன்ச் டிஎப்டி (TFT) டிஸ்பிளே கிடைக்கிறது. இது முந்தைய மாடலைவிட பெரிய டிஸ்பிளேவாகும். ஆகவே, மெனு பார், மெசேஜ், கிரிக்கெட் ஸ்கோர் போன்வற்றை எளிதாக பார்த்து கொள்ளலாம். 2,000mAh பேட்டரி கொடுக்கிறது. இதில் 22 மணி நேரங்களுக்கு டாக் டைம் கிடைக்கும்.
அதுவே ஸ்டான்ட்பை மோடில் (Standby Mode) 30 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். இந்த பேட்டரிக்கு டைப் சி (Type C) சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) மட்டுமல்லாமல், 3ஜி மற்றும் 2ஜி கனெக்டிவிட்டி உள்ளது. வோஎல்டிஇ எச்டி (VoLTE HD) மூலம் எச்டி வாய்ஸ் கால்கள் (HD Voice Calls) சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் 4ஜி சிம் (Dual 4G SIM) பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த ஐடெல் சூப்பர் குரு 4ஜி மேக்ஸ் போனில் விஜிஏ கேமரா (VGA Camera) கிடைக்கிறது. இதற்கு ஃபிளாஷ் சப்போர்ட் உள்ளது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் கேமராவை பயன்படுத்தலாம். ஓப்பன் கேமரா என்று கமெண்ட் செய்தால், கேமரா ஆன் செய்யப்படும். மேலும், பீச்சர் போன்களில் கிடைக்கும். வயர்லெஸ் எப்எம், ப்ளூடூத் போன்ற சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
64 எம்பி ரேம் மற்றும் 128 எம்பி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 64 ஜிபிக்கான மெமரி கார்டு சப்போர்ட் கொடுக்கிறது. டி127 (T127) சிப்செட் கொடுக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இந்த ஐடெல் சூப்பர் குரு 4ஜி மேக்ஸ் போனின் விலை ரூ.2,099ஆக இருக்கிறது. இந்த விலையுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








