Home
Mobile

Itel அறிமுகம் செய்த புதிய போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தனது புதிய ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா (Itel Super 26 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஐடெல் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா அம்சங்கள் (Itel Super 26 Ultra specifications): 6.78-இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED)) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Itel அறிமுகம் செய்த புதிய போன்.. 6000mAh பேட்டரி..  எந்த மாடல்?

தரமான யுனிசாக் டி7300 பிராசஸர் (Unisoc T7300 processor) உடன் ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ItelOS 15.1.2சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போன். சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search), ஏஐ கேமரா எரைசர் (AI Camera Eraser) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் இந்த ஐடெல் போன் வெளிவந்துள்ளது.

6000mAh பேட்டரி உடன் ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. குறிப்பாக இது ஒரு 4ஜி போன் ஆகும். அதாவது 4ஜி, வைஃபை, ப்ளூடூத், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐடெல் போனில் உள்ளன.

ஆனால் இந்த ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஐடெல் சூப்பர் 26 அல்ட்ரா போனின் ஆரம்ப விலை BDT 19,990 (இந்திய மதிப்பில் ரூ.14,900)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel Super 26 Ultra launched with 6000mAh battery: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X