Subscribe to Gizbot

ஐடெல் எஸ்41 : வோல்ட் அம்சத்தின் அடுத்தக்கட்டம், அப்படியென்ன ஸ்பெஷல்.?

Written By:

இந்திய சந்தையில் மலிவான 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு மகத்தான தேவை ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை உலகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை ஈர்ப்பது ஒருபக்கமிருக்க, மறுபக்கம் உலகின் அதிவேக வளர்ச்சி மற்றும் மிகப்பெரிய மொபைல் போன் சந்தையாக இந்தியா விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஐடெல் எஸ்41 : வோல்ட் அம்சத்தின் அடுத்தக்கட்டம், அப்படியென்ன ஸ்பெஷல்.?

இந்தியாவை குறிவைத்துள்ள சில நிறுவனங்கள் மலிவான விலை நிர்ணயம் என்பதில் குறியாக உள்ளனர் ஆனால், தரம் சார்ந்த விடயத்தில் கோட்டை விட்டு விடுகின்றன.

ரூ.6,999/- என்ற விலை நிர்ணயம்ம லிவு விலை கருவியாக இருந்தாலும் கூட இமேஜிங், பாதுகாப்பு, மென்பொருள், பேட்டரி காப்பு, மல்டிமீடியா மற்றும் உற்பத்தித் திறன்ஆ கிய அனைத்திலும் கவனம் செலுத்தும் பயனர்களை மனதில் கொண்டு உருவாக்கம் பெட்ரா ஒரு சமீபத்திய அறிமுகம் தான் ஐடெல் எஸ்-41. வெறும் ரூ.6,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அப்படி என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்பதை காண்போம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இணையற்ற இணைய இணைப்பு

இணையற்ற இணைய இணைப்பு

வேகமான இணையத்தை வழங்கும் அதே நேரத்தில் கேமரா, டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் மீதும் கருவியின் பேட்டரி நீடிக்கும் திறன் கவனம் செலுத்துகிறது.

இக்கருவியின் மிகச்சிறந்த விஷயம் வேகமான மற்றும் இணையற்ற இணைய இணைப்பு தான். ஒரு நம்பகமான மற்றும் விரைவான தகவல்தொடர்பு தளம் இல்லாத நிலையில், இந்த எடைகுறைவான நவீன ஸ்மார்ட்போன் ஆனது உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

அதன் அடிப்படையில் இந்த எஸ்41 ஒரு முதன்மை இணைப்பு அம்சங்கள் கொண்ட ஒரு பட்ஜெட் சாதனமாகும் என்பதில் சந்தகமே இல்லை. மேலும் இக்கருவி தற்கால பயனர்களுக்கு மிகவும் தேவையான 4ஜி வோல்ட், 3ஜி, 2ஜி, ப்ளூடூத் மற்றும் ஒரு இரட்டை சிம் அட்டை ஆகிய இணைப்பு ஆதரவுடன் வருகிறது.

உயர்த்தப்பட்ட ஸ்மார்ட் பின்புற கைரேகை ஸ்கேனர்

உயர்த்தப்பட்ட ஸ்மார்ட் பின்புற கைரேகை ஸ்கேனர்

பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ள விரும்பாத பயனர்களை மனதில் கொண்டு இக்கருவியில் பின்புறம் உயர்த்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்று பொதிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்கள் ஸ்மார்ட்போன் மீதான அங்கீகரிக்கப்படாத அணுகல்களை தடுக்கிறது மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவு பற்றிய கவலைகளை மறக்கடிக்க செய்கிறது.

0.1 வினாடிகளுக்குள்

0.1 வினாடிகளுக்குள்

சென்சார் பணிச்சூழல்மிக்க இந்த சென்சார் உங்கள் விரலை அதிக முயற்சிகள் ஏதுமின்றி விரைவாக கண்டறிந்து கருவியை தீர்க்க அனுமதிக்கும். அதுமட்டுமினிற் லாங் பிரஸ் செய்வதின் மூலம் ஒரு புகைப்படம் எடுப்பதற்கும், உள்வரும் கோரிக்கைக்கு பதிலளிக்கவும் இந்த ஸ்கேனர் உங்களுக்கு உதவும். நிறுவனத்தின்படி 0.1 வினாடிகளுக்குள் செல்பீக்களை எடுக்கலாம். மேலும் விரைவான பயன்பாட்டுத் துவக்கத்திற்காக ஐந்து விரல்களுக்கு ஐந்து வெவ்வேறு பயன்பாடுகளையும் கட்டமைக்கலாம்.

பிரீமியம் வடிவமைப்பு மற்றும் மிருதுவான 720பி ஐபிஎஸ் டிஸ்பிளே

பிரீமியம் வடிவமைப்பு மற்றும் மிருதுவான 720பி ஐபிஎஸ் டிஸ்பிளே

பார்ப்பதற்கு சிறிய பிரீமியம் கருவியாக காட்சியளிக்கும் இதில்பி பின்புறம் ஒரு மேட் பூச்சு கொண்டுள்ளது. இது தேவையற்ற தடங்களை கட்டுப்படுத்துகிறது மற்றும் உங்கள் கைகளில் இருந்து கைபேசியில் நழுவி விடாமலும் பார்த்துக்கொள்ளும்.

இதன் வன்பொருள் பொத்தான்களும் சரியான முறையில் பணிகளை செய்யும் வண்ணம் இடம் அமர்த்தப்பட்டுள்ளது. ரூ.7000/- என்ற பட்ஜெட்டில் வாங்க தலைசிறந்த கருவியாக திகழும் எஸ்41 ஆனது ஒரு சிறந்த டிஸ்பிளே அனுபவத்தையும் உறுதி செய்கிறது.

1280x720 பிக்சல் தீர்மானம் ஒரு மிருதுவான 5 அங்குல எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஆட்டோஃபோகஸ் அம்சம் கொண்ட 8எம்பி

ஆட்டோஃபோகஸ் அம்சம் கொண்ட 8எம்பி

கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி ஆட்டோஃபோகஸ் அம்சம் கொண்ட 8எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இதன் 8எம்பி சென்சார் துல்லியமான கலர் ரிப்ரொடக்ஷன் மூலம் நல்ல அளவிலான படங்களை பதிவு செய்கிறது.

குறிப்பாக மிகவும்இயற்கையான முறையில் பதிவு செய்கிறது. கேமரா ஆர்வலர்களின் கருத்துப்படி, எஸ்41 ஆனது ஒரு முழு நீள தொழில்முறை பயன்முறை கொண்டுள்ளது. இது கலர் பேலன்ஸ், வயிட் பேலன்ஸ் மற்றும் எக்ஸ்போஷர்ஆ கியவைகளை தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.

பிரகாசமான செல்பீக்களை கைப்பற்ற உதவும்
முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், பேஸ் பியூட்டி மட்டும் நைட் மோட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் தெளிவான, மிருதுவான மற்றும் பிரகாசமான செல்பீக்களை கைப்பற்ற உதவும் 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

மேலும் இது 7 செலப்ரிடி மேக் அப் எபெக்ட்ஸ், 10 கஸ்டம் பியூட்டி எபெக்ட்ஸ் மற்றும் 17 பியூடிப்பை எபெக்ட்ஸ் கொண்டுள்ளது.

விரமான பயன்பாடுகளையும் கையாள முடியும் எந்தவொரு போராட்டமும் இன்றி, ஒவ்வொரு நாளும் உங்களின் வேலைகளை துரிதமாக முடிக்க இந்த கருவியின் 1.25 ஜிகாஹெட்ர்ஸ் மீடியா டெக் க்வாட்கோர் செயலி உங்களுக்கு உதவும். மற்றும் இதன் 3 ஜிபி ரேம் ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளை இயக்க உதவும்.

இக்கருவியை கேம்ஸ் மற்றும் புகைப்பட எடிட்டிங் போன்ற தீவிரமான பயன்பாடுகளையும் கையாள முடியும். சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, இது 16 ஜிபி உள் நினைவகம் கொண்டுள்ளது. இது போதுமான பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், வீடியோக்கள்ம ற்றும் ஆவணங்களை சேமிக்க போதுமானதாக உள்ளது. மேலும் இது 32ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு ஆதரவையும் வழங்குகிறது.

700எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரி

அன்றாட பணிகளில் எந்தவொரு இடையூறும் நிகழ்த்தாத, பேட்டரி முடிவு பற்றிய கவலைகளை கொடுக்காத ஒரு 2700எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரி அலகு உடன் ஐடெல் எஸ்41 வெளிவந்துள்ளது. இதன் திறமையான சிபியூ மற்றும் கிராபிக் யூனிட் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பதிப்பானது ஸ்மார்ட்போனின் பேட்டரி நீடிப்புக்கு துணை புரியும்.

வெறும் ரூ.6,990/-க்கு கிடைக்கும் இந்த நேர்த்தியான மற்றும் ஸ்டைலான எஸ்41 ஆனது அதன் சிறிய வடிவம் மற்றும் மலிவு விலை நிர்ணயத்தை மீறிய தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் பாணி ஆகியவைகளை கொண்டுள்ளது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்லேட் சாம்பல் மற்றும் ஸ்பைடின் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
There's an immense demand for affordable yet feature loaded smartphones in the Indian market. It is world's fastest growing and biggest mobile phone market

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot